இனி ஆதாரைக் கட்டாயப் படுத்திக் கேட்டால், எவ்வளவு அபராதம்? என்ன தண்டனை ? என்று தெரியுமா..? - Seithipunal
Seithipunal


 

வங்கிக் கணக்குகளிலும், மொபைல் எண்ணிற்கும், ஆதார் கட்டாயமாக்கபட்டது. இந்த ஆதார் அட்டை, தற்போது நமது பிரதான அடையாளமாக மாறி விட்டது. மத்திய அரசு, மக்களுக்கு, நலத் திட்ட உதவிகள் வழங்குவதற்காக, ஆதார் அட்டையை கட்டாயமாக்கியது. இதனால், பலர் போலியாக பயன் அடைந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

வங்கிகள், தொலை தொடர்பு நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்டு உள்ளிட்ட எல்லாவற்றிலும், நமது ஆதார் எண் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும், என நிர்ப்பந்திக்கப் பட்டது. அதே சமயம், இந்த ஆதார் எண்ணைக் கொண்டு, ஒரு தனி நபரின், விபரங்கள் அனைத்தையும், அவருக்குத் தெரியாமலே, தெரிந்து கொள்ளும் விதம் இருந்ததும் கண்டு பிடிக்கப் பட்டது. இதனால், பலர் மன உளைச்சல் அடைந்தனர். இதனால், ஆதாரைத் தடை செய்யும் படி, நீதி மன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்த நிலையில், ஆதார்  தொடர்பான வழக்கில், உச்ச நீதி மன்றம் அதிரடியான தீர்ப்பினை வழங்கி உள்ளது. இனி, மக்கள் நலத் திட்ட உதவி பெறுவதற்கு மட்டுமே இந்த ஆதார் பயன் படுத்தப்பட வேண்டும்.

இனி, வங்கிகளோ, தொலை தொடர்பு நிறுவனங்களோ, வேறு யாரேனும், ஆதாரைக் கட்டாயப் படுத்திக் கேட்க கூடாது. அப்படிக் கேட்டால், அந்த நிறுவனத்திற்கு, 1 கோடி ரூபாய் வரை அபராதம், ஆதாரைக் கேட்ட ஊழியருக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, என்று ஆணையிட்டுள்ளது.

அதன்படி, சட்ட திருத்தமும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கு மத்திய அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aadhar is not compelsary here after


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->