ஆதாரை பத்திரப்படுத்துங்கள்.. ஒரு கோடி ரூபாய் வரை தண்டம் - இன்று அதிரடியாக வெளியாக உள்ள அறிவிப்பு..? கொண்டாட்டத்தில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


இந்திய குடிமகனின் தனிமனித அடையாளம் என்ற பெயரில் அனைவருக்கும் ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. வங்கிச் சேவை, பான் கார்டு, செல்போன் சேவை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் போன்ற அரசு சேவைகளை பெறுவதற்குஆதாரை கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கைரேகை, கண் விழித்திரை உள்ளிட்ட தனிமனிதனின் தகவல்கள் ஆதாரில் இடம்பெறுவதால் அதற்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் காரணமாக அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் அல்ல என்றும் இதன் மூலம் தகவல் திருடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக வழக்கு தொடரப்பட்டது.

இதில், மற்ற அடையாள அட்டைகளிலிருந்து ஆதார் வேறுபட்டது எனவும் இதனை கண்டிப்பாக போலியாக தயாரிக்க முடியாது எனவும், ஆதார் சமூகத்தில் பின் தங்கியுள்ள மக்களுக்கு அவசியமானதாகவும், குடிமகனின் அதிகாரத்தை உணர்த்துவதாகவும் உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

இதில் தனிமனித சுதந்திரம் என்பதனை தவிர மற்ற எல்லாமே சிறப்பாக உள்ளது. சிறு திருத்தங்கள் மட்டும் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறித்தியுள்ளது. மேலும் தனியார் நிறுவனகள் ஆதாரை கட்டாயமாக கேட்க கூடாது எனவும் தீர்ப்பளித்துள்ளது.

சிபிஎஸ்சி, நீட் போன்ற கல்வி சார்ந்த விஷ்யங்களுக்கு ஆதார் கட்டாயமில்லை எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த நிலையில், ஆதார் சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், அச்சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறும் நிறுவனங்களுக்கு ஒரு கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், மேலும் மேலும் விதிகளை மீறினால் ஒவ்வொரு முறையும் பத்து இலட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அனுமதியின்றி,  தகவல் தொகுப்பகத்தை பயன்படுத்துதல், தகவல்களை அழித்தல் போன்றவற்றுக்கான சிறைத்தண்டனை மூன்று  ஆண்டுகளில் இருந்து பத்து ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.

18 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்ய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதல் அவசியமாகும். மேலும் ஆதார் இல்லை என்று எந்த ஒரு குழந்தைக்கும் வழங்கப்படவேண்டிய சலுகைகள் மறுக்கப்படாது.

18 வயதுக்கு குறைவாக குழந்தையாக இருந்தபோது அளித்த பயோமெட்ரிக் பதிவுகளை, பதினெட்டு வயது பூர்த்தியான ஆறு மாதங்களுக்குள் ரத்து செய்ய வாய்ப்பு அளிக்கப்படும்.

புதிய செல்போன் சிம்கார்டு பெறவும், வங்கி கணக்கு தொடங்கவும் விருப்பத்தின்பேரில் ஆதார் எண் கொடுக்கலாம். அது கட்டாயம் இல்லை. இந்த திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aadhar correction passed to the parliament


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->