பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணை கரம்பிடித்த எம்.எம்.ஏ.! மகிழ்ச்சியில் புதுமண பெண்.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகளில் பெரும்பாலான அநீதிகளுக்கு தகுந்த நீதிகள் கிடைக்காமல்., அவர்களின் வாழ்க்கையை இழந்து பெரும் துயரத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இந்த சமயத்தில்., ஆங்காங்கே நடைபெறும் சில நல்ல விஷயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஆனால் அந்த நல்ல செயலும்., பல விதமான தொடர் போராட்டங்களுக்கு பின்னரே நிகழ்கிறது என்பது தான் பெரும் வேதனையே... 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் ஒன்றாக விளங்கும் மாநிலம் திரிபுரா. திரிபுரா மாநிலத்தின் ரீமவல்லி சட்டமன்ற தொகுதியில்., சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் தனஞ்சய். இவர் சுதேசி முன்னணி கட்சியின் சார்பில் சட்டமன்ற தேர்தலில் பங்கேற்று வெற்றி பெற்றார். 

இந்த நிலையில்., கடந்த மே மாதத்தின் 20 ஆம் தேதியன்று பெண் ஒருவர்., அங்குள்ள மகளீர் காவல் நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினரான தனஞ்சய் பாலியல் பலாத்காரம் செய்தாக புகார் அளித்தார். அந்த புகாரில்., தன்னுடன் நட்பு வட்டாரத்தில் நெருங்கி பழகிய தனஞ்சய்., தம்மை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்து திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருகிறார் என்று கூறினார். 

இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு., அங்குள்ள திரிபுரா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில்., இந்த வழக்கை எதிர்த்து முன்ஜாமீன் வழங்க கூறி நீதிமன்றத்தில் தனஞ்சய் சார்பில் மனுவும் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் தனஞ்சய் தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தனஞ்சய்யை அதிரடியாக கைது செய்ய முடிவு செய்து காவல் துறையினர்., விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., அங்குள்ள கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும்., இவர்கள் இருவரும் தற்போது மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்றும் தனஞ்சயின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a thiripura MLA married her rapped girl after police complaint


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->