அடுத்தடுத்து இந்தியாவிற்கு நேரும் துயரம்.! மனஅழுத்ததால் வாழ்க்கையை இழக்கும் இளைஞர்கள்.!! ஆராய்ச்சியில் வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகிலேயே அதிகளவு இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. அதிகளவு இளைஞர்களை கொண்ட நாடக விளங்கும் இந்தியாவில் இருக்கும் இளைஞர்களில் சுமார் 30 கோடிக்கும் மேற்பட்டோர் மனஅழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

அவ்வாறு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் இளைஞர்களின் மனஅழுத்தம் மற்றும் மனநோய் பிரச்சனைகள் குறித்த தகவல்கள் விவாதிக்க படாமல்., மனிதர்களை வெகுவாக பாதிக்கும் நோய்களில் ஒன்றாக மன நோய் பிரச்சனையானது இருக்கிறது வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்ட உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது., சர்வதேச உலக நாடுகளின் அளவில் இந்திய மக்கள் தொகையில் சுமார் 6.5 விழுக்காடு அளவுள்ள நபர்கள் மனஅழுத்ததில் உள்ளதாகவும்., அவ்வாறு மன அழுத்தத்தில் உள்ள நபர்களில் 10.9 விழுக்காடு அளவுள்ள நபர்கள் தற்கொலை செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது. 

அந்த வகையில்., தற்கொலை செய்து கொள்ளும் நபர்களில் பெரும்பாலானோர் சுமார் 44 வயதிற்கும் மேற்பட்ட நபர்கள் என்பதும் தெரியவனத்துளது. இந்தியாவிற்கு அடுத்த நிலையில் சீனா., அமெரிக்கா., பிரேசில்., இந்தோனேசியா., ரஷியா மற்றும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் அடுத்தடுத்து அதிகளவில் மக்கள் மன அழுத்தத்தில் உள்ளனர். 

இன்றுள்ள பெரும்பாலான இளைஞர்கள் அதிகளவில் உடலில் ஏற்படும் நோய்கள் மற்றும் மனதில் ஏற்படும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இளம் வயதிலேயே முதுமையான தோற்றம்., உடல் மற்றும் மன குறைபாடு போன்றவற்றை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த தகவலானது தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a research commits announce indian youngsters mostly affected mental stress


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->