டெல்லி விவசாயிகள் போராட்டம் வன்முறை விவகாரம்.. சட்டக்கல்லூரி மாணவர் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம்.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினத்தில், வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாய சங்கங்கள் டிராக்டர் பேரணி நடத்தியது. இந்த பேரணி இறுதியில் வன்முறையாக மாறியது. 

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்த மும்பை சட்டக்கல்லூரி மாணவர் அஸீஸ் ராய் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவிற்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்த கடிதத்தில், டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் டிராக்டர் பேரணியின் போது சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர். 

இதனால் வன்முறை ஏற்பட்டு, பொதுச்சொத்துக்கள் சேதமடைந்துள்ளது. செங்கோட்டையில் ஏற்றப்பட்டு இருந்த தேசியக்கொடி அகற்றப்பட்டு, குறிப்பிட்ட சமூகத்தின் கொடி நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் கவுரவம் மற்றும் கண்ணியத்தை இது சீர்குலைத்துள்ளது.

ஒட்டுமொத்த இந்தியாவும் காயம் அடைந்துள்ளது. தேசியக்கொடியோடு அரசியல் சாசனமும் அவமதிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய வேண்டும். சமூக விரோதிகள் தொடர்பாக விசாரணை நடைபெற வேண்டும் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Mumbai Law Student Letter to Supreme Court Judge Sharad Arvind Bobde


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->