"அவசரமா சரக்கு வேணும்", அவசர உதவி எண்ணிற்கு கால் செய்த அரைபோதை மனிதர்.!  - Seithipunal
Seithipunal


அவசர உதவி எண் 100-க்கு போன்செய்து போலீசாரை  மது வாங்கி வருமாறு கேட்ட சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

பொதுமக்கள் ஏதாவது அவசர உதவிக்காக அல்லது ஆபத்து நிறைந்த சூழலில் உடனடியாக காவல் துறையினரை தொடர்பு கொள்ள ஏதுவாக அனைத்து மாநிலங்களிலும், 100 என்ற இலவச எண்ணிற்கு போன் செய்து அழைக்கலாம் என்று கூறப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் கோடார் என்ற பகுதியில் வசித்து வரும் சச்சின் என்பவர் அந்த மாநில காவல் துறையினரை அவசர உதவி எண்ணான 100 என்ற எண்ணில் அழைத்து வரச் சொல்லி இருக்கின்றார். இதன் காரணமாக அவசர உதவி தேவைப்படும் என்று நினைத்த காவல்துறையினர் அந்த நபர் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

அப்பொழுது என்ன காரணத்திற்காக காவல்துறையினரை அழைத்தீர்கள் என்று கேட்டதற்கு தனக்கு மது வாங்கி தர சொல்வதற்காகத்தான் அழைத்தேன் என்று தெரிவித்துள்ளார். இதை கேட்டவுடன் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்து, அந்த நபர் கூறுவதை அப்படியே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A men called police for liquor drinks


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->