டெல்லியில்., பல் துலக்கும் பிரஷை விழுங்கிய நபர்.!! விஷேச கண்ணியை எடுத்த மருத்துவர்கள்.!! நடந்த சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


டெல்லி நகரில் உள்ள சீமாபுரி பகுதியை சார்ந்தவர் அவிட் (36)., இவர் தினமும் பல் துலக்கும் போது பல்துலக்கும் பிரஷ் மூலமாக தொண்டை பகுதியை சுத்தம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். 

இந்நிலையில்., நேற்று முன்தினம் வழக்கம் போல பல் துலக்கிவிட்டு., பிரஸ் மூலமாக தொண்டையை சுத்தம் செய்து கொண்டு இருந்துள்ளார். அந்த சமயத்தில் பிரஷ் எதிர்பாராதவிதமாக அவரது தொடைப்பகுதியில் இருந்து வழுவி நழுவி வயிற்றுப்பகுதிக்குள் சென்றுள்ளது. 

இதனால் கடும் வயிற்றுவலியால் துடித்த அவர் சம்பவம் குறித்து உடனடியாக தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 

மருத்துவமனையில் இவரது நிலைமையை அறிந்த மருத்துவர்கள் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவனைக்கு அழைத்து செல்லக்கூறி ஆலோசித்துள்ளனர். மருத்துவரின் ஆலோசனையை ஏற்ற குடும்பத்தார் உடனடியாக அவசர ஊர்தியின் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு சி.டி.ஸ்கேன் செய்த மருத்துவர்கள் பிரஸ் வயிற்றின் மேல் பகுதியில் இருப்பதை உறுதி செய்தனர்., இதனையடுத்து  எண்டோஸ்கோபி சிகிச்சை மூலமாக அறுவை சிகிச்சையின்றி பிரஷை வெளியே எடுத்தனர். 

தகுந்த நேரத்தில் அவருக்கு உதவி செய்து அவரின் உயிரை காப்பாற்றிய மருத்துவருக்கு அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி கூறியது அந்த பகுதியில் இருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

English Summary

a man Swallowed a brush in Delhi


கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
Seithipunal