குழந்தை உள்ளம் கொண்ட முதலைக்கு நேர்ந்த சோகம்.! கண்ணீரில் மூழ்ங்கிய கிராம மக்கள்.!!   - Seithipunal
Seithipunal


 

இந்தியாவின் வடக்கு மாநிலங்களுள் ஒன்றான சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பவா மோஹ்தாரா கிராமத்தில் உள்ள கோவில் குளத்தில் முதலை ஒன்று வாழ்ந்து வந்தது. இந்த முதலையானது சுமார் 3.4 மீ நீளத்துடனும்., சுமார் 250 கிலோ எடையையும் கொண்டது. 

இந்த முதலை வசித்து வந்த குளத்தை எந்த விதமான உபயோகத்திற்கும் அங்குள்ள கிராம மக்கள் பயன்படுத்தாத நிலையில்., முதலைக்கு "கங்கா ராம்" என்று பெயர் வைத்து அதனை வழிபட்டும் வளர்த்தும் வந்தனர். 

தற்போது இந்த முதலைக்கு 130 வயதாகும் நிலையில்., கடந்த செவ்வாய்க்கிழமையன்று திடீரென இறந்து குளத்தின் மீது மிதந்தபடி கிடந்தது. இதனை கண்ட மக்கள் செய்வதறியாது வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் குளத்தில் இருந்து முதலையின் உடலை மீட்ட போது., முதலையானது இறந்தது தெரியவந்தது. முதலையின் உடலை மருத்துவமனைக்கு எடுத்து சென்று பிரேத பரிசோதனை செய்த பின்னர் முதலையின் உடலை ஒப்படைத்தனர். 

முதலையை வனத்துறையினர் ஒப்படைத்த பின்னர் முதலையின் உடலுக்கு மலர்தூவி இறுதி மரியாதையை செய்து., இறுதி ஊர்வலமாக டிராக்டரில் கொண்டு சென்று முதலையின் உடலை நல்லடக்கம் செய்தனர். இந்த இறுதி ஊர்வலத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலியை செலுத்தினர்.   

இந்த முதலையானது குளத்தில் குளிப்பவர்களுக்கு எந்த விதமான துன்புறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவிக்கும் கிராம மக்கள்., வனத்துறையினர் பாதுகாப்பு கருதி முதலையை வேறு இடத்திற்கு அழைத்து சென்றதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பின்னர் குளத்தில் கொண்டு வந்து விடப்பட்டதாக தெரிவித்தனர். மேலும்., இத்தனை நாட்களாய் குடும்பத்தில் ஒரு அங்கமாக இருந்து வந்த முதலை இறந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

English Summary

a crocodile is died in sathiskar state., village peoples feeling sad


கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
Seithipunal