74 மாவட்டங்களுக்கு 144 தடை உத்தரவு.. மத்திய அரசு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 14616 பேர் உயிரிழந்து உள்ளனர். 3 லட்சத்து 36 ஆயிரத்து 838 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரசால் 396 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.  

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் மக்கள் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவை கடைபிடித்தனர். 

அதன்பிறகு 5மணிக்கு கொரோனா வைரசுக்கு எதிராக பணியாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் கைதட்டி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் 75 மாவட்டங்களில் 80-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது மத்திய அரசு. அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து சேவைகளும் அலுவலகங்களும் நிறுத்தப்படுவதாக மாநில அரசுகள் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

74 districts 144 for india


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->