வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள்.. விரையும் 64 விமானங்கள்..!! அதிகாரபூர்வ அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தினமும் உயிரிழப்புகள் தொடர்ந்து வந்தது. இதனால் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து, விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. 

இதனால் சொந்த நாடுகளில் இருந்து பிற நாடுகளுக்கு படிப்பிற்கும், பணிக்காகவும், சுற்றுலா சென்ற நபர்களும் அங்கேயே சிக்கியதை அடுத்து, இவர்களை மீண்டும் தாய் நாட்டிற்கு அழைத்து வர கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்தியாவிலும் இருந்து பலரும் இவ்வாறாக பிற நாடுகளில் சிக்கியுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வர முதற்கட்ட நடவடிக்கையாக மே மாதம் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை முதல் வாரத்திற்கான விமானம் இயக்கப்படவுள்ளது. 

இதன்படி, 64 விமானங்கள் இயக்கப்படவுள்ளதாகவும், இதில் ஐக்கிய அமீரகத்திற்கு 10 விமானங்களும், கத்தாருக்கு 2 விமானங்களும், சவூதி அரேபியாவிற்கு 5 விமானங்களும், ஐரோப்பாவிற்கு (யூ.கே) 7 விமானங்களும், சிங்கப்பூருக்கு 5 விமானங்களும், அமெரிக்காவிற்கு 7 விமானங்களும், பிலிபைன்ஸ்க்கு 5 விமானங்களும், பங்களாதேஷிற்கு 7 விமானங்களும், பக்ரைனிற்கு 2 விமானமும், மலேசியாவிற்கு 7 விமானமும், குவைத்திற்கு 5 விமானமும், ஓமனிற்கு 2 விமானமும் இயக்கப்படவுள்ளது.

இதன்படி, லண்டனில் இருந்து மும்பை, அகமதாபாத், பெங்களூரு மற்றும் டெல்லி வரை பயணம் செய்ய ரூ.50 ஆயிரம் கட்டணமாகவும், அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து டெல்லி, ஹைதராபாத் பயண விமானத்திற்கு ரூ.1 இலட்சம் கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மாலத்தீவு மற்றும் வளைகுடா நாடுகளான ஐக்கிய அமீரக அரபு நாடுகளில் இருக்கும் இந்தியர்களை மீட்க இந்திய போர்க்கப்பல்கள் விரைந்துள்ளது என்பதும், இந்த கப்பல்களில் வரும் 7 ஆம் தேதி சோதனைக்கு பின்னர் ஏற்றப்படும் பயணிகள் கொச்சிக்கு வருகை தருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

64 Indian flights get and return Indian from other countries


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->