ஒருவருக்கு தலா 5 ஆயிரம் நிதி உதவி.. முதலமைச்சர் அறிவிப்பு.! உற்சாகத்தில் இளைஞர்கள்.!! - Seithipunal
Seithipunal


வெளிநாடுகளில் வேலை இழந்தவருக்கு உதவி தொகையாக தலா 5000 வழங்கப்பட உள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, கேரளாவில் இதுவரை 29 ஆயிரத்து 151 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 537 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு, பலியானவர்கள் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. 

கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா வைரஸ் நோயாளியுடன் தொடர்பில் இருப்பதன் மூலம் நோய் பரவுவது அதிகரித்து வருகிறது. நோய் பரவல் அதிகரிப்பதால் நோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் காவல் துறையினரையும் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

சுகாதாரத் துறையினருக்கு உதவுவதற்காகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் சுகாதாரத் துறை பணியை மட்டுமே செய்வார்கள். கொரோனா நேயாளிகளுடன் தொடர்பில் இருப்பவர்களை எளிதில் கண்டுபிடிக்க காவல்துறையினரால் முடியும், எனவே அந்த பொறுப்பை காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலு, வெளிநாடுகளில் இருந்து வேலை இழந்தவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுக்கு தலா 5 ஆயிரம் நிதி உதவி அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக ரூபாய் 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என பினராயி விஜயன் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5000 each for those lost their jobs abroad


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->