இந்தியாவில் இப்படி ஒரு உத்தரவா?! இனிமேல் எச்சி துப்புவிங்க! துப்பினால் அபராதம்!  - Seithipunal
Seithipunal


பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என குஜராத் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த அந்த மாநில தலைமைச் செயலாளரான அனில் முகிம் இதனை தெரிவித்துள்ளார். 

கொரோனா  வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகள் குழந்தைகள் மையம் என அனைத்தும் மார்ச் 16 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை மூடப்படும் என அறிவித்துள்ளார். அதேசமயம் பள்ளி செயல்படவில்லை என்றாலும் ஆசிரியர்களும் அலுவலர்களும் நிச்சயமாக பணியிடத்திற்கு வந்தே ஆகவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அதனை எடுத்து மாநிலத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் நீச்சல் குளங்களை மார்ச் 29ம் தேதி வரை மூடப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என  எச்சரித்துள்ளார் அனில் முகிம். 

இந்தியாவில் இதுபோன்ற சட்டங்கள் அனைவராலும் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பொது இடங்களிலும் ரயில் நிலையங்களில் ரயில்களிலும் எச்சில் துப்பும் நபர்களின் தொல்லை சகித்துக்கொள்ள முடியாத அளவில்தான் உள்ளது. இந்த சட்டம் இந்தியா முழுவதும் வந்தாலும் அனைவராலும் வரவேற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

500 fine for saliva spitting in Gujarat


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->