படுக்கையில் 5 வயது சிறுவனின் மோசமான காரியம்.! கண்டறிந்த சித்தப்பா அந்த இடத்தில் துடப்பத்தை திணித்த கொடூரம்.!  - Seithipunal
Seithipunal


5 வயது சிறுவன் அறியாமல் படுக்கையில் சிறுநீர் கழித்த காரணத்தால் அவனுடைய சித்தப்பா துடைப்பத்தால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் ரத்தாலி என்ற பகுதியைச் சேர்ந்த ஜாபர் என்பவர் அன்றாடம் குடித்து விட்டு பிரச்சனை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். தினமும் தனது மனைவி மற்றும் அருகில் வசிப்பவர்கள் உடன் சண்டை போடுவது அவரது பழக்கம். இந்த நிலையில் நன்றாக குடித்துவிட்டு சம்பவ தினத்தன்று போதையில் வந்துள்ளார். 

எனவே அவருடைய மனைவி தூங்கச் சொல்லி அவரை அறைக்கு அனுப்பி வைத்துள்ளார். தனது ரூமுக்கு சென்று பார்த்தபோது அவருடைய ஐந்து வயது அண்ணன் மகன் படுக்கையில் சிறுநீர் கழித்து இருந்தது தெரியவந்துள்ளது.

இதனால் மிகுந்த ஆத்திரம் அடைந்த அவர் வீட்டில் இருந்த துடைப்பத்தை கொண்டு சிறுவனை கடுமையாகத் தாக்கி துன்புறுத்தி இருக்கின்றார். மேலும் துடைப்பக் குச்சியை எடுத்து அந்த சிறுவனின் அந்தரங்க உறுப்பில் சொருகி துன்புறுத்தியுள்ளார். எனவே, சிறுவன் அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

இதனை அடுத்து ஜாபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காவல் நிலையத்தில் தனது கணவர் மீது ஜாபரின் மனைவி புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த ஜாபரை கண்டறிந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 years boy killed by her uncle 


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal