தமிழகத்திற்கு 400 கோடி.. முன்கூட்டியே வழங்கிய மத்திய அரசு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,01,993 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த  24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 3523 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,91,64,969 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,56,84,406 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,11,853 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. 

இந்நிலையில், மாநில அரசுகளுக்கு பேரிடர் நிதியாக ரூபாய் 8873 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் 50 சதவீத நிதியை மாநில அரசுகள் சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்துக்கு ரூபாய் 4,000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் வழங்க வேண்டிய நிதியை கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய அரசு முன்கூட்டியே வழங்கியுள்ளது.  ஆக்சிஜன் உற்பத்தி, வெண்டிலேட்டர், ஆம்புலன்ஸ் சேவை மேம்படுத்த இந்த நிதியை பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

400 crore fund for tamilnadu central govt announced


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->