தமிழகத்தில் 386 பேருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் ஏற்பட்ட போது தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தது. இது குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்தது. வைரஸ் தொற்றின் மரபணுவை ஆய்வு செய்து, தமிழகத்தில் எந்த வகையான வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய திட்டமிட்டது.

அதன்படி, இளம் வயதினர், குழந்தைகள், கொரோனாவால் உயிரிழந்தோர் மற்றும் தடுப்பூசி செலுத்தியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மொத்தம் 1,159 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை பெங்களூரில் உள்ள வைரஸ் மரபணு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. 

அதில், 554 மாதிரிகள் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி 386 பேருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், 47 மாதிரிகளின் மட்டுமே ஆல்பா வைரஸ் காணப்பட்டது. டெல்டாவை தொற்றுக்குள்ளானோரில் 81 சதவீதம் பேரும் வளரிளம் பருவத்திலும், வயதானவர்களும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 554 மாதிரிகளில் 96 மாதிரிகள் குழந்தைகளிடம் இருந்து பெறப்பட்டவை. அதில் 76 சதவீத குழந்தைகள் டெல்டா வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பு ஊசி செலுத்தியும் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 83 சதவீதம் பேரின் சளி மாதிரியில் டெல்டா வகை வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

386 delta type corona in tamilnadu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->