9 வயதுச் சிறுவனுக்கு பாலியல் பலாத்காரத் தொல்லை கொடுத்த 36 வயதுப் பெண்…! - Seithipunal
Seithipunal


 

கேரள மாநிலம், தேஞ்சிப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவியின் பெயர் சுமதி. இந்த தம்பதியருக்கு 9 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இவர்களது வீட்டிற்கு அருகில், சுமதியின் அண்ணன் வீடும் உள்ளது. இதனால் அடிக்கடி அந்த சிறுவன் தன் மாமா வீட்டிற்கு விளையாடச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக, சிறுவனின் உடல் நிலையில் மாற்றம் தெரிவதைக் கண்டு, அவனை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர், அவரது பெற்றோர். அங்கு அந்த சிறுவனைப் பரிசோதித்த டாக்டர், அந்த சிறுவன் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப் பட்டுள்ளான், என்று கூறினார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவனின் பெற்றோர், யார் அவனைப் பலாத்காரம் செய்தது? என்று கேட்ட போது, அவன் கூறிய செய்தியைக் கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர் .

அவன் அடிக்கடி தன் மாமா வீட்டிற்குச் செல்லும் போது, அவன் மாமா வீட்டில் இல்லாத சமயங்களில், அவனது மாமாவின் மனைவி, இந்த சிறுவனைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகக் கூறினான்.

இதனை அடுத்து, அந்த 36 வயதுப் பெண் மீது, போலீசில் புகார் அளித்தனர், அந்த சிறுவனின் பெற்றோர்.

அந்த சிறுவன் அளித்த வாக்குமூலத்தின்  அடிப்படையில், அந்தப் பெண் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

English Summary

36 aged lady tried to rape 9 years aged boy


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal