சபரிமலையில் வரலாறு காணாத காணிக்கை வசூல்.. அடேங்கப்பா இத்தனை கோடியா? - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டும். அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 16-ந் தேதி முதல் நடை திறக்கப்பட்டது. 

கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் இந்த ஆண்டு மிக பிரம்மாண்டமாக நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு போன்றவற்றின் மூலம் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் சரியான நேரத்திற்கு வந்தால் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.  இருப்பினும், கூட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் சூழ்நிலை தான் நிலவி வருகிறது.

 இதனால், பக்தர்களின் வசதிக்காக கோவில் நடை திறப்பு நேரத்திலும் தேவஸ்தானம் மாற்றம் செய்துள்ளது. அதாவது, வழக்கமாக அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு வந்த நடை, தற்போது 3 மணிக்கே திறக்கப்படுகிறது. அதேபோல் மாலையிலும் நடை மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தாண்டு மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, சபரிமலைக்கு வரும் பக்தர்களின் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் சபரிமலையில் மகரவிளக்கு பூஜை நிறைவு விழா இன்று இரவோடு முடிவடைகிறது. இன்று இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், நாளை காலை 7 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக அடுத்த மாதம் பிப்ரவரி 12-ந் தேதி கோவில் நடை திறக்கப்படும்.

இந்த நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்த வருடத்துக்கான சபரிமலை வருமானம் ரூ.330 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

330 crores in sabarimalai Ayyappan temple


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->