மாநிலம் முழுவதும் இன்று இரவு முதல் மீண்டும் ஊரடங்கு.. வெளியான அறிவிப்பு.!! எவை இயங்கும்.? எவை இயங்காது.? - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கு அறிவித்துள்ளனர். இன்று இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை இரண்டு நாட்களுக்கு ஊரடங்கை அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து உத்தர பிரதேசத்தின் தலைமை செயலாளர் ஆர்.கே.திவாரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஊரடங்கு உத்தரவு மாநிலம் முழுவதும் தீவிரமாக அமல்படுத்தபடுவதாக தெரிவித்துள்ளார். அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வியாபார நிறுவனங்கள், தனியார் மற்றும் பொது வாகனங்கள் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவமனை, மருந்து கடைகள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கடைளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அத்தியாவசிய பணியாளர்கள் அடையாள அட்டை காண்பித்துவிட்டு சென்று வரலாம். அதுபோல் பன்னாட்டு விமான மற்றும் ரயில் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அரசு பணியாளர்கள் பணிக்கு வந்து செல்ல அரசு போக்குவரத்து மட்டும் செயல்படும்.  கிராமப்புற பகுதியில் உள்ள தொழிற்சாலைகள், நகர்புறங்களில் உற்பத்தி நிறுவனங்கள் அதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக உத்தரபிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் உத்தர பிரதேசம் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 32,681. பலி எண்ணிக்கை 862 ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 days lock down in up


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->