கனமழையால் இதுவரை 170 பேர் உயிரிழப்பு.! ஒரு கோடி பேர் பாதிப்பு.!! - Seithipunal
Seithipunal


அசாம் பீகார் மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். 

வட மாநிலங்களில் கொட்டி தீர்த்த கன மழையால் அசாம் பீகார் மாநிலங்களில் மிக மோசமான வெள்ள பாதிப்பு அடைந்துள்ளது. அசாமில் 28 மாவட்டங்களில் 52 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அசாம் மாநிலத்தில் 66 பேர் உயிரிழந்துள்ளனர் பிரம்மபுத்ரா ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் கரையோர கிராமங்களில் வெள்ள நீர் புகுந்து பிரசித்தி பெற்ற காசிரங்கா பூங்காவின் 90 சதவீத பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதைப்போல அசாமில் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

கடந்த  2004ம் ஆண்டுக்கு பிறகு மிக மோசமான வெள்ளத்தை அந்தப் உயிரியல் பூங்கா சந்தித்துள்ளது. மாநிலம் முழுவதும் 26 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மாறுபட்ட அமைப்போ முதற்கட்டமாக 257 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பீகாரில் ஏற்பட்ட வெள்ளத்தால் 12 மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 104 பேர் உயிரிழந்துள்ளனர். பீகாரில் 77 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் 13 குழுக்களாக பிரிக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் பாதித்த மாநிலங்களில் மீட்பு கருவிகளுடன் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

170 deaths so far due to heavy rains One million people affected


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->