பெற்றோர்களே கவனம்., செல்போன் வெடித்து 17 பள்ளி மாணவி துடிதுடித்து உயிர் இழப்பு.! வெளியான அதிர்ச்சி காரணம்.! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் வகுப்புக்காக செல்போனை சார்ஜ் போட்டபடி பயன்படுத்திய 17 வயது பள்ளி மாணவி, செல்போன் வெடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இடையிடையே நோய்த்தொற்று பரவல் குறையும் போது, ஒரு சில மாதங்கள் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடந்தது.

இருந்த போதிலும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்த காரணத்தினால்,  பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமாக மாணவர்கள் கல்வி கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் மெஹ்சனா கிராமத்தை சேர்ந்தவர் சாரதா தேசாய். இவர் கொரோனா நோய்த்தொற்று ஊரடங்கு காரணமாக தனது பள்ளி வகுப்பை ஆன்லைன் மூலம் படித்து வருகிறார். அப்போது செல்போனை சார்ஜ் போட்டபடி அவர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

செல்போன் வெகுநேரம் பயன்படுத்தியதாலும், செல்போனை சார்ஜ் போட்டுக்கொண்டு பயன்படுத்தியதாலும் அந்த போன் திடீரென வெடித்ததாக தெரிகிறது.

இதனால் அந்த மாணவி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

(பெற்றோர்கள் கவனத்துக்கு, உங்கள் பிள்ளைகள் சார்ஜ் போட்டு கொண்டே செல்போன் பயன்படுத்தாமல் கவனமாக பார்த்து கொள்ளுங்கள்.)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17 years old girl die in mobile blast


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->