ஆன்லைன் கிளாசினால், மாணவிக்கு நேர்ந்த சங்கடம்..! பறிபோன உயிர்..!  - Seithipunal
Seithipunal


நாள்முழுவதும் கேம் விளையாடவும், கண்ட வீடியோக்களை பார்க்கவும், தோழிகளுடன் அரட்டை அடிப்பதற்காகவும்  ஆண்ட்ராய்டு போனை வைத்திருக்கும் பணக்கார விட்டு பிள்ளைகளுக்கு மத்தியில், ஒரு ஏழைவீட்டு மாணவி இணையத்தில் படிப்பதற்கு ஆண்ட்ராய்டு போன் இல்லாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இப்போது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரவி வருவதால், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் வகுப்புகளை இணைய வழிமூலமாக எடுத்து வருகிறார்கள். ஆகவே, மத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வார் மாவட்டத்தைச் சார்ந்த 12ம் வகுப்பு படித்து வரும் ஒரு 17 வயது மாணவியுடன் படிக்கும் சக மாணவிகள் ஆண்ட்ராய்டு போன் மூலமாக கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் தினக்கூலி தொழிலாளியான அந்த மாணவியின் தந்தையிடம் ஆண்ட்ராய்டு போன் வாங்கித்தருமாறு கேட்டு உள்ளார். 

ஒரு சாதாரண தினக்கூலி தொழிலாளியான அந்த மாணவியின் தந்தை, இப்போது பணமில்லை எனவே பிறகு வாங்கித்தருகிறேன் என்று கூறியுள்ளார். ஆனாலும், படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அந்த மாணவி போன் இல்லாமல் கல்வி கற்க முடியவில்லையே என வருந்தினார். எனவே, அந்த மாணவி தன் தாயிடம் சென்று போன் வாங்கி தரச்சொல்லி வாக்குவாதம் செய்து உள்ளார். ஆனால், அவர் தாயும் சிறிது காலம் பொறுத்திருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். 

ஆனாலும், சமாதானம் அடையாத அந்த மாணவி கடந்த வியாழக்கிழமை அன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி தற்கொலை செய்ய நினைத்து விஷம் குடித்ததை அவரின் தாயிடம், அந்த மாணவியின் தங்கை கூறியதும் அந்த மாணவியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால், அங்கே சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17 years girl suicide for online class 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->