கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் 16ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு.!! - Seithipunal
Seithipunal


பெங்களூரில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அங்கிருந்து பெங்களூருவுக்கு வருபவர்களால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வல்லுனர்கள் கூறிவருகின்றனர். 

ஆகையால், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க நகரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த தடை உத்தரவை நீட்டித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெங்களூரில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வரும் 16ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால்m பொது இடங்களில் நான்கு பேர் கூட அனுமதி இல்லை. போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணி நடத்துவதற்கும்  அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

144 in bengaluru


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->