கனமழை காரணமாக 144 தடை உத்தரவு நீட்டிப்பு.!! - Seithipunal
Seithipunal


வங்க கடலில் உருவான நிவர் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று புதுச்சேரி அருகே நேற்று இரவு 11.30 முதல் இன்று அதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்தது. 

அதன்பிறகு, தீவிர புயலாக வலுவிழந்து புதுச்சேரி அருகே முழுமையாக கரையை கடந்தது. வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்தது. மேலும், 6 மணி நேரத்திற்குப் பின்பு வலுவிழந்து புயலாக மாறும். இதன் காரணமாக வட தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

மேலும், காற்றும் வீசி வருகிறது. நிவர் புயல் தாக்கம் காரணமாக புதுச்சேரி, கடலூர், சென்னை ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பெரும்பாலான இடங்களில் நீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக அவரவர் வீட்டில் இருக்குமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில், புதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று மாலை வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக இன்று காலை 6 மணிவரை தடை உத்தரவு படுத்தப்பட்டிருந்தநிலையில், இன்று மாலை 6 மணி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

144 extended in puducherry


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->