பிரசாதத்தை சாப்பிட்டு 12 பலியான விவகாரத்தில் 2 பேர் கைது! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் மைசூருவில் கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதம் சாப்பிட்ட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹானூர் தாலுகாவிலுள்ள சுல்வாடியில் மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு இன்று காலை பூமி பூஜை நடைபெற்றது. அதனையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் அதிர்ச்சியடைந்த மக்கள், பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

பிரசாதத்தை சாப்பிட்ட 15 வயது சிறுமி உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். மேலும், பிரசாதம் சாப்பிட்ட 60க்கு மேற்பட்ட காகங்களும் இறந்துவிட்டது என்று ,முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 90-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், காவல் துறையினர் முதல் கட்டவிசாரணையில் பக்தர்கள் சாப்பிட்ட கோவில் பிரசாத தக்காளி சாதத்தில் பூச்சி கொல்லி மருந்து கலக்கப்பட்டு இருப்பது அந்தச் சாதத்தை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் காவல் துறையினர் இதுவரை 2 பேரைக் கைது செய்துள்ளனர், 5 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பக்தர்களைச் இன்று அறநிலையத்துறை அமைச்சர் புட்டரங்கா ஷெட்டி சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.

அப்போது அவர் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, கோவில் பிரசாதத்தில் சிலர் பூச்சிகொல்லி மருந்து கலந்துள்ளது தெரியவந்துள்ளது. தவறு செய்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே காவல் துறையினர் இது தொடர்பாக இருவரைக் கைது செய்துள்ளனர். இரு தரப்புக்கும் இடையிலான பகையால், பக்தர்களை பலியாக்குவது முறையல்ல என்று கூறினார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், கோவில் பிரசாதம் சாப்பிட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. 12 பேர் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளனர். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 people death is 2 man arrested


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal