15 கொள்ளு பேரன்,பேத்திகளுடன்., 105 வயது பாட்டி.! இவர் கதையை கேட்டால் தன்னமிக்கை தானாக வரும்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் இருக்கும் கொல்லம் நகரைச் சேர்ந்த பாகிரதி என்ற 105 வயது மூதாட்டி 70 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய கணவரை இழந்து இரண்டு மகன்கள் 4 பெண் குழந்தைகளையும் வளர்த்து படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்த நிலையில் தற்போது கல்வி கற்கும் ஆர்வத்துடன் அவர் படித்து வருகின்றார்.

சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்து, தன் உடன் பிறந்தவர்களை வளர்த்துவிட்டு, பின் திருமணம் செய்து கொண்டார். 30 வயதிற்குள் இரண்டு மகன்கள், 4 பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். வாழ்க்கையை நல்ல மாதிரியாக சென்ற நேரத்தில் கணவரைப் பறிகொடுத்த பாகிரதி மீண்டும் உழைக்க தயாரானார்.

உழைத்து குழந்தைகளையும் படிக்க வைத்தார். தற்போது அவருக்கு பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள், பேரன்கள், பேத்திகள் என்று மொத்தம் 15 பேரப்பிள்ளைகள் இருக்கின்றது. இந்த வயதிலும் அவரது பார்வை, குரல், சிந்தனை என்று எதிலும் குறைகள் ஏற்படவில்லை. தற்போதைய கேரள அரசின் மாநில எழுத்தறிவு திட்டத்தின்கீழ் அந்த மூதாட்டி தேர்வு எழுதி வருகின்றார்.

இதற்கு முன்பு கேரளாவில் 96 வயதில் கார்த்தியாயினி என்றவர்.100 மதிப்பெண்களில் 98 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். அவரின் ஆர்வத்தை பார்த்து முதல்வர் பினராயி விஜயன் அஷ்ஷாராலக்ஸம் என்ற சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். 

105 வயதாகும் நிலையிலும் பாகிரதி அம்மா இதுவரை அரசு கொடுக்கும் எந்த சலுகையும் பெறாமல் வாழ்ந்து வருகின்றார். அவருக்கு ஆதார் கார்டு உள்ளிட்ட எந்த விதமான அடையாள அட்டைகளும் இல்லை. அவருடைய குடும்பத்தினர் பாகிரதி அம்மாவிற்கு ஆதார் கார்டு மற்றும் முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

105 old grandmother writting exam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->