உலக தூக்க தினம்! "குறட்டை"  தானே என்ற அலட்சியம் வேண்டம்! மருத்துவரின் பகிரங்க எச்சரிக்கை!  - Seithipunal
Seithipunal


இன்று என்ன நாள் தெரியுமா? தூக்கத்திற்கும் ஒருநாள் இருக்கிறதா? ஆம் உலக தூக்க தினம் இன்று மார்ச் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. 

இன்றைய நாள் குறித்து, நுரையீரல் மற்றும் தூக்க நோய்களின், சிறப்பு மருத்துவர் பால.கலைக்கோவன் அவர்கள் நமது செய்திபுனலுக்கு அளித்த நேர்காணலில்,
 
உங்கள் வீட்டில் தூக்கத்தில் குறட்டை விடுபவர் உள்ளாரா? 

குறட்டை என்பது நமது உடல் சோர்வான நிலையில் வருவது என்று பலர் நினைப்பதுண்டு . அது ஒரு ஆபத்தில்லா பிரச்சனை என்றும் நம்பவதுண்டு . ஆனால் நாம் விடும் குறட்டை , நம் உடலையே பாதிக்கக்கூடும் என்பதை நீங்கள் அறிவீர்களா ? நமது குறட்டை நம் ஆயுளைக் குறைக்கும் என்றால் அதை நம்புவீர்களா !

ஆம் அப்படிப்பட்ட ஒரு பிரச்சனைதான் OBSTRUCTIVE SLEEP APNEA (OSA)

 (OSA)-”குறட்டையுடன் கூடிய தூக்கத்தில் மூச்சுத்திணறல்". 

OSA  ஏன் ஏற்படுகிறது என்றும், அதன் அறிகுறிகள் என்ன என்பதையும் பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம்.

குறட்டை உள்ள அனைவருக்கும் இந்த OSA நோய் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது .அப்படி என்றால் சாதாரண குறட்டைக்கும், OSA குறட்டைக்கும் உள்ள வித்தியாசத்தை எப்படி கண்டுபிடிப்பது.

OSA  என்பது ஏன் ஏற்படுகிறது?

நாம் சுவாசிக்கும் காற்று , நமது மூக்கின் வழியாக உள்ளே சென்று தொண்டை பகுதியை கடந்து நுரையீரலுக்கு செல்லும் . நாம் விழிப்புடன் இருக்கும் நேரத்தில் , இந்த பாதையில் அடைப்பு ஏற்படாது . ஆனால் தூங்கும்போது அந்த தொண்டை தசைகள் தளர்ந்து , மூச்சு உள்ளே செல்வது தடைப்படும்.

இந்த தடைப்பட்ட மூச்சுபாதை வழியாக நாம் மூச்சுவிடும் போது வரும் சத்தம் தான் “குறட்டை“. தூக்கத்தின் ஒரு பகுதியில் மட்டும் (ஆழ்நிலை தூக்கம் – REM SLEEP) இது போன்ற தொண்டை சதைகள் தளர்வது உண்டு .அது அளவுக்கு மீறி தடைப்பட்டால் ,காற்று நுரையீரலுக்கு உள்ளே போவது முழுவதுமாக தடைபடும் போது இந்த OSA (தூக்கத்தில் மூச்சுத்திணறல்) ஏற்படும்.

 OSA வின் அறிகுறிகள் என்ன ?

(1)தூக்கத்தின் போது அதிகப்படியான குறட்டை  

(2)தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவது போல் உணர்தல்
(3)தூங்கும் போது மூச்சுவிடுவதை நிறுத்துவது

(4)பகல் நேரத்தில் அதிகமாக தூக்கம் வருதல்  

(5)காலை எழுந்தவுடன் தலைவலி ஏற்படுவது

(6)அதிகமான மறதி ,சோர்வு  ,ஆர்வமின்மை ஏற்படுவது  
(7)தாம்பத்ய உறவில் ஈடுபாடு இல்லாமை
 (8) வாகனம் ஓட்டும் போது தூக்கம் வருவது  

(9)அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது கூட தூக்கம் வருவது  
(10)காலை எழுந்தவுடன் நாக்கு வறண்டு போய் ,தொண்டையோடு ஒட்டிபோன உணர்வுடன் தாகம் எடுத்தல்.

மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளுள் "3" க்கு மேல் இருந்தால் உங்களுக்கு OSA இருக்க வாய்ப்புள்ளது .

OSA வினால் உண்டாகும் பாதிப்புகள் என்ன ?

சர்க்கரை நோய்((Diabetes) ,
இரத்த அழுத்தம் (High Blood pressure),
இருதய நோய் (HEART ATTACK) , 
பக்கவாதம் (STROKE) 
குழந்தையின்மை ( Infertility)
ஞாபக மறதி (Memory loss)
திடீர் மரணம் (Sudden Death)

மேற்கண்ட OSA அறிகுறிகள் உள்ளவர்கள் தக்க நேரத்தில் தகுந்த மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும் என கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள "கோவன் நுரையீரல் சிகிச்சை மையம்" டாக்டர் பால.கலைக்கோவன்  கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WORLD SLEEP DAY MESSAGE FROM DR KALAIKOVAN


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->