கர்ப்பப்பை புற்றுநோயை நமது உடலில் ஏற்படும் மாற்றத்தை வைத்தே கண்டறிவது எப்படி?.!! - Seithipunal
Seithipunal


பொதுவாக பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயில் கருப்பை புற்றுநோயும் உள்ளது. பெண்களின் கருப்பையில் இருக்கும் உயிரணுக்களின் அசாத்திய வளர்ச்சியின் காரணமாக இந்த பக்க விளைவானது ஏற்படுகிறது. இந்த புற்றுநோய் ஏற்படுவதற்கு முன்னதாகவே., இதற்கான அறிகுறிகள் நமக்கு தெரியவரும். அந்த அறிகுறிகள் குறித்து இனி காண்போம். 

சில நேரங்களில் சுமார் 50 வயதை கடந்த பெண்களுக்கு கருப்பை புற்றுநோய்யானது ஏற்பட வாய்ப்புள்ளது. கருப்பையில் புற்றுநோய் இருக்கும் பட்சத்தில்., மாதவிடாய் நேரத்தின் இரத்த போக்கானது அளவுக்கு அதிகமாக இருக்கும். மேலும்., உடலின் எடையும் திடீரென குறைய துவங்கும். 

கருப்பை புற்றுநோய்க்கான பொதுவாக அறிகுறிகளாக மூன்று அறிகுறிகள் உள்ளது., இதில் முதல் நிலையாக அசாதாரண இரத்தப்போக்கு., இரண்டாவது நிலையாக சிறுநீர் கழிக்கும் சமயத்தில் சிரமம் ஏற்படுதல் மற்றும் மூன்றாவது முறையாக தாம்பத்தியத்தின் போது அதிகளவு வலி ஏற்படுவது என்பதாகும். 

அசாதாரண இரத்தப்போக்கு:

இந்த கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் அளவுக்கு அதிகமான இரத்தப்போக்கானது இருக்கும். மாதவிடாய் நின்ற பின்னரும் இரத்தப்போக்கானது ஏற்படும் பட்சத்தில்., மருத்துவரை அணுகி ஆலோசித்துக்கொள்வது நல்லது. 

இந்த நேரத்தில் மாதவிடாயின் இரத்த நிறமானது இளஞ்சிவப்பு நிறம் அல்லது வெள்ளை நிறம் மற்றும் வெள்ளை கலந்த இளஞ்சிவப்பாக வெளியேறும் பட்சத்தில் கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆகும். 

சிறுநீர் கழிக்கும் சமயத்தில் ஏற்படும் சிரமம்: 

பொதுவாக சிறுநீர் கழிக்கும் சமயத்தில் கோடை காலங்களில் சிரமம் ஏற்பட்டால் அது கோடை காலத்தின் தாக்கமாக கூட இருக்கலாம். இந்த நேரத்தில் அளவுக்கு அதிகமாக சிரமம் ஏற்படும் பட்சத்தில் அது கருப்பை புற்றுநோயாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் கருப்பை புற்றுநோயை தவிர்ப்பதற்கு அதிகளவு நீரை அருந்தினால் நல்லது. 

தாம்பத்தியத்தின் போது வலி: 

பெரும்பாலான பெண்கள் தாம்பத்தியத்தின் போது வலியை அனுபவிப்பது வழக்கமான ஒன்று. இந்த நிலையில்., தாம்பத்தியத்தின் போது அளவுக்கு அதிகமான வலியானது ஏற்படும் பட்சத்தில் அது கருப்பை புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். கருப்பையில் இருக்கும் கட்டிகளின் மூலமாக தாம்பத்தியத்தில் இந்த வலி தெரியவருகிறது. 

English Summary

why uterus cancer affected and caution for ladies


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal