சரியா தூங்க மாட்டீங்களா.? கட்டாயம் இது உங்களுக்கு தான்.. ஆண்களே ஆபத்து.!  - Seithipunal
Seithipunal


ஒரு மனிதன் சராசரியாக இரவு நேரத்தில் ஆறு மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை கட்டாயம் உறங்க வேண்டும். அப்படி உறங்கவில்லை என்றால் அவர்களது உடல் மற்றும் மனதில் பல்வேறு கோளாறுகள் ஏற்படும்.

உறக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த பதிவில் காணலாம். 

மூட் ஸ்விங்: 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் உறக்கம் இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு மனநிலை மாற்றங்கள் அதிகமாக ஏற்படும். இதனால் கவன சிதறல், கோபம், எரிச்சல் மற்றும் சோர்வு உள்ளிட்டவை ஏற்படக்கூடும். 

சரியான தூக்கம் இல்லை என்றால் மன ஆரோக்கியத்தில் மிகுந்த பாதிப்புகள் ஏற்படும். இதனால் டிப்ரஷன் உள்ளிட்ட கோளாறுகள் ஏற்படலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

அத்துடன் தூக்கமின்மை பிரச்சனை உங்கள் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கும். ஒருவர் நன்றாக தூங்கும் போது அவரது உடலில் ஆன்டி பாடிகள் மற்றும் சைட்டோகைன்கள் போன்ற பாதுகாப்பு தொற்றுகளை உருவாக்கும். இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் சீராக செயல்படும். 

அத்துடன் தூக்கமின்மை உடலுறவில் மீது ஏற்படும் ஆர்வத்தை குறைக்கும். இதனால் பல ஆண்களுக்கு ஆண்மை குறைவு பிரச்சனையும், விந்து முந்துதல் பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.

அதுபோல பெண்கள் இரவு நேரத்தில் நீண்ட நல்ல உறக்கத்தை பெறவில்லை என்றால் கர்ப்பப்பை கட்டிகள், நீர் கட்டிகள் மற்றும் மார்பகப் புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்பட க்கூடும். 

அத்துடன் அதிகப்படியான கவனச்சிதறல் ஏற்பட்டு நினைவாற்றலை இழக்க தூக்கமின்மை காரணமாக அமைகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why should sleep 8 hours In day


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->