உணவில் நல்லெண்ணையை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்.!! - Seithipunal
Seithipunal


உடல்நலத்தில் இந்தியர்கள் காட்டும் அதீத அக்கறை காரணமாக புதிது,புதிதாக சமையல் எண்ணெய் வகைகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் எள்ளில் இருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெய் ,மற்ற அயலக சமையல் எண்ணெய்களுக்கு சிறிதும் குறைந்தது அல்ல.பெயருக்கு ஏற்றார் போல் பல ’நல்ல’ மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது நல்லெண்ணெய். நல்லெண்ணெயில் இருக்கக்கூடிய சீசமோல் என்ற மூலக்கூறு இதய தசைகளுக்கு வலு அளிப்பது மட்டுமல்லாமல், ரத்தக்குழாய்களில் கெட்ட கொழுப்பு படியாமல் தடுக்கிறது.

மற்ற எண்ணெய்களை விட நல்லெண்ணெய் செரிமானத்தை சீராக்குகிறது.இதில் உள்ள மக்னீசியம் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் கொண்ட சர்க்கரை நோயாளிகள் நல்லெண்ணெய்யை உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலனை தரும் எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாகச் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் இதுதான்.

கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்., நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. அதிலும் இந்த எண்ணெயை பெண்கள்   அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் கர்ப்பிணிகள் நல்லெண்ணெயைக் கொண்டு, வயிற்றில் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். காலையில் எழுந்து பல் தேய்த்த பின்னர் 25 மி எண்ணெயை வாயில் ஊற்றி 10 நிமிடம் அப்படியே வாய்க்குள்ளேயே வைத்திருந்து பற்களுக்கிடையே நன்றாக படும்படி கொப்பளிக்க நுரைத்து வெண்மை நிறமாக மாறி இருக்கும். அப்போது அதை வெளியே கொப்பளித்து விடவேண்டும். 

இப்படி செய்வதால் தோல்   சம்பந்தப்பட்ட நோய்கள், அரிப்பு போன்றவை நீங்கிவிடும். உள் உறுப்புகள் பலம் அடையும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். பல் வலி, ஈறு வீக்கம், தலை வலி சரி செய்யப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why indian uses ellu oil during food making eating reason is good health gain form ellu oil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->