சாம்பார் ரசத்தில் போடும் கொத்தமல்லிக்கு இப்படி ஒரு மருத்துவ குணமா?..!! - Seithipunal
Seithipunal


நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் உணவுகளில் ஒன்றாகவும்., தினமும் சமைக்கும் உணவுகளை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பெரும் உதவி செய்கிறது. கொத்தமல்லி இலைகளின் மூலமாக பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. மேலும்., மருந்து பொருளாகவும் கொத்தமல்லி பயன்படுகிறது. கொத்தமல்லி உணவின் சுவையை அதிகரிப்பதோடு., நமது உடலை பல நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. 

கொத்தமல்லியில் வைட்டமின் ஏ., வைட்டமின் பி., வைட்டமின் பி1., வைட்டமின் சி., கால்சிய சத்துக்கள்., இரும்பு - தயமின் - நியாசின் - ரிபோஃபிளோவின் சத்துக்கள்., பாஸ்பிரஸ் சத்துக்கள்., சோடியம் மற்றும் பொட்டாசிய சத்துக்கள்., மாக்னீசு சத்துக்கள். போலிக் அமிலம்., மாவுசத்து., கொழுப்புசத்து மற்றும் நார்சத்து., நீர்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. 

kothamalli, கொத்தமல்லி, கொத்தமல்லி இலை, Coriander, Coriander leafs,

கொத்தமல்லியை பொறுத்த வரையில் வீட்டு தோட்டத்திலும்., சிறு தொட்டிகள் மூலமாகவும் வளர்க்கலாம். நாம் சமையலில் பெரும்பாலும் ரசம் மற்றும் சாம்பார் வகை உணவுகளில் மனத்திற்க்காக கொத்தமல்லி தழைகளை பயன்படுத்துவோம். கொத்தமல்லியை சரியான அளவோடு உணவில் சேர்த்து வருவது நல்லது. கொத்தமல்லியை உணவில் சேர்ப்பதால் நரம்பு மண்டலம் மற்றும் எலும்பு மண்டல பாதிப்புகளும்., தசை மண்டல பாதிப்புகளும் சரியாகும். 

மேலும்., அதிகளவு பசியை தூண்டவும் செய்யும்., இதனை பசியின்மை பிரச்னையால் அவதியுறும் நபர்கள் அதிகளவு சாப்பிடலாம். வாயு பிரச்சனையை எளிதில் குணமடைய செய்யும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுக்களின் அளவு குறைக்கப்படும். உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புகளின் அளவு அதிகரிக்கப்படும். கல்லீரலின் செயல்பாடானது சரி செயப்படுகிறது. 

kothamalli, கொத்தமல்லி, கொத்தமல்லி இலை, Coriander, Coriander leafs,

இதுமட்டுமல்லாது கல்லீரலை பலப்படுத்துதல்., மலக்குடல் பிரச்சனையை சரி செய்தல்., இன்சுலின் சுரப்பினை சீர் செய்தல்., இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுகள் வைக்கவும்., அல்சீமியர் நோயினை சரி செய்யவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து., நுரையீரலை பாதுகாக்க வழிவகை செய்கிறது. வாய்ப்புண் மற்றும் வாயு தொல்லையை சரி செய்து., செரிமான பிரச்சனியையும் சரி செய்யும். வாய்க்குமட்டல் பிரச்சனை மற்றும் சிறுநீர் பாதை தொற்றுகளையும் சரி செய்யும்.  

கண்களில் ஏற்படும் பார்வை கோளாறுகள்., வெண்படல அழற்சி சரி செய்யப்படுகிறது. கிருமி நாசினியாக செயல்படும் கொத்தமல்லியால் சருமத்தில் படை மற்றும் தோலரிப்பு போன்றவை சரி செய்யப்படும். முகங்களில் ஏற்படும் முகப்பரு மற்றும் தோலில் ஏற்படும் தழும்பு., குருதிக்கழிச்சல்., செரிக்காமல் ஏற்படும் கழிச்சல்., அடிக்கடி ஏப்பம் வரும் பிரச்சனை சரியாகும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why Coriander added food items


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->