எந்த நேரத்தில் இளநீரை குடிப்பது உடலுக்கு நல்லது?..!! - Seithipunal
Seithipunal


இளநீரை குடிப்பதற்கு நேரம் என்பது தேவையில்லை. எந்த சமயத்திலும் வாங்கி., விரும்பி அருந்தும் பானமாகவே இளநீர் இருந்து வருகிறது.  அந்த வகையில், எந்த தருணத்தில் இளநீரை அருந்தினால், உடலுக்கு இரட்டிப்பு சக்திகள் மற்றும் நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி நாம் காண்போம். பொதுவாக நாம் இளநீர் அருந்தும் நேரம் காலை வேலையாகவே இருந்து வருகிறது. 

இளநீரை மதியம் மற்றும் இரவு வேளைகளில் அருந்தினால் சளி தொல்லைகளுக்கு உள்ளாக நேரிடும் அல்லது பிற உடல் உபாதைகள் ஏற்படும் என்ற எண்ணமும் இருந்து வருகிறது. இளநீரை மதிய வேளைகளில் அருந்தாமல் இருப்பதற்கு காரணமாக, இளநீர் கடைகள் பெரும்பாலும் சாலையின் ஓரத்திலேயே அமைந்திருக்கும். இந்த கடைகளில் இருக்கும் இளநீரை மதிய வேளைகளில் வெயிலின் தாக்கமானது அதிகளவு சூழ்ந்திருக்கும். 

இது போன்ற கடைகளில் இருக்கும் இளநீரை அருந்துவது நல்லதல்ல... மாறாக மதிய வேளைகளில் மரத்தடியில் இருக்கும் இளநீர் கடைகள் மற்றும் கடைகளின் உள்ளே மதிய வெயில் படாத வகையில் வைக்கப்பட்டுள்ள இளநீரை அருந்தலாம். இரவு வேளைகளில் சிலர் இளநீரை குடித்து சளித்தொல்லையால் அவதியுற வாய்ப்புள்ளதால், இரவு வேளையில் இளநீரை சிலர் தவிர்ப்பதும் உண்டு. 

காலையிலேயே வெறுமையான வயிற்றில் இளநீரை குடிப்பதால், இளநீரில் இருக்கும் லாரிக் என்ற அமிலத்தின் உதவியால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இது உடலின் வளர்சிதை மாற்றத்தினை அதிகரித்து, உடல் எடையின் குறைப்பிற்கு உதவுகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு உடலின் நீர்சத்து தேவையை நிவர்த்தி செய்யவும், நீர்சத்தினை தக்க வைக்கவும் உதவுகிறது. 

இதுமட்டுமல்லாது கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யவும், கர்ப்பிணி பெண்களுக்கு காலையில் ஏற்படும் நெஞ்சு எரிச்சலை குணப்படுத்தவும் உதவி செய்கிறது. இளநீர் என்பது விளையாட்டு வீரர்களுக்கு அருப்பெறும் பானமாக இருந்து வருகிறது. உடற்பயிற்சிக்கு முன்னதாக இளநீரை குடித்தால், உடலின் நீரோட்டத்தை அதிகரித்து, உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.

உடற்பயிற்சியை நிறைவு செய்த பின்னர், உடற்பயிற்சியின் போது உடல் இழந்த எலெக்ட்ரோலைட்டுகளின் இழப்பீடை சரி செய்து சமன் செய்ய உதவுகிறது. சோர்வை எதிர்த்து போராடவும், உடலின் ஆற்றலை அதிகரிக்கவும் இளநீர் உதவி செய்கிறது. சாப்பிட்டதற்க்கு பின்னர் இளநீரை குடித்தால் வயிற்றில் வீக்கம் ஏற்படும் பிரச்சனையை தவிர்க்க உதவி செய்கிறது. 

சாப்பிடுவதற்கு முன்னதாக இளநீரை குடித்து வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சியானது கிடைக்கிறது. நமது உணவு தேவையையும் முழுமையடைய செய்கிறது. இதனால் அளவுக்கு அதிகமான உணவு எடுத்துக்கொள்ளும் வழக்கத்தை தடுத்து, செரிமானத்தை எளிதாக மாற்றுகிறது. மேலும், இதய துடிப்பினை சீராக்கி உடலின் நலனை அதிகரிக்கிறது. 

இதுமட்டுமல்லாது இரவு நேரத்தில் உறங்குவதற்கு முன்னதாக இளநீரை பருகினால், நமது மன அழுத்தமும் குறைந்து, மனதிற்கு அமைதியானது கிடைக்கிறது. மேலும், உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றவும், உடலின் சிறுநீரக பாதையினை சுத்தம் செய்யவும் உதவுகிறது. இதனால் பிற நோய் தொற்றுகள் மற்றும் சிறுநீரக தொற்றுகளின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உதவி செய்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

When drink coconut water is good for health


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->