கருவுருதலுக்கான சரியான வயது எது? தெரியுமா!! - Seithipunal
Seithipunal


கருவுறுதல் நடைபெற ஒரு பெண்ணின் மனசும், உடலும் நன்றாக ஒத்துப் போக வேண்டும். அப்பொழுது தான் ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுக்க முடியும். மேலும், கருவுறுதலுக்கு ஒரு பெண்ணின் வயது என்பது மிக முக்கியமான ஒன்று. 

வயது 20-24 ல் மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கும். இந்த காலகட்டத்தில் கர்ப்பம் தரித்தால் 20% ஹைபர்டென்ஷன் பாதிப்பு மற்றும் கர்ப்ப கால நீரிழிவு அபாயம் வருவது குறையும். ஆனால் இந்த காலகட்டத்தில் உடல் ரீதியான பிரச்சினையால் கர்ப்பம் சிக்கலாகும். இந்த வயதில் கல்யாணம், வாழ்க்கையில் செட்டில் ஆகுவது போன்ற டென்க்ஷன்களும் ஏற்படும். இந்த காலத்தில் 9.5% கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

வயது 25-29 ல் இந்த வயது தான் கருத்தரிக்க சரியான வயது ஆகும் . மார்பக மற்றும் கர்ப்பபை புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இந்த காலகட்டத்தில் வேலை அழுத்தம் மற்றும் திருமண அழுத்தம் எதுவும் இல்லாமல் இருப்பதால் துணைகள் பெற்றோராக சரியான வயது. கருச்சிதைவு 10%வர ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இந்த வயதில் பாதிப்பு குறைவு தான்.

வயது 30-34 ல், வயது முப்பதை அடையும் போது கருவுறுதல் திறன் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து விடும். எனவே, சிகிச்சை எடுத்தால் தான் கருவுறுதல் சாத்தியமாகும். செயற்கை முறை கருத்தரிப்பு 25-28% ஆக இருப்பது 40 வயதை அடையும் போது 6-8 % ஆக குறைந்து விடும்.

இந்த 20 ஆம் நூற்றாண்டில் இருந்து சிசேரியன் செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த வயதில் குழந்தையை வளர்ப்பது எளிதாக இருக்கும். வாழ்க்கையில் ஓரளவுக்கு செட்டில் ஆகி விடுவதால் பெற்றோராக இருப்பதற்கு நேரம் கிடைக்கும். கருச்சிதைவு ஏற்பட 11.7%வரை வாய்ப்புள்ளது. வயது 34 கிற்கு பிறகு கருவுறுதல் சிரமமே, ஆனால் சாத்தியமில்லை என்று கூறமுடியாது.

இந்த நவீன காலத்தில் தம்பதிகள் தங்களின் பொருளாதார நிலை, வேலை நிலையைக் கொண்டு கருவுறுதலை தீர்மானிக்கின்றனர். இருப்பினும் இதன் நன்மை தீமைகளை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு கருவுறுதலை திட்டம் போடுவது நல்லது. 

English Summary

what is age to pregnant


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal