#கொரோனா வைரஸ்: வீடியோ வெளியிட்டு கோரிக்கை வைத்த நடிகர் விஜய்.!  - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பீதியை கிளப்பி வருகின்றது. இந்தியாவிலும் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்துகின்றது. 

சவுதியில் இருந்து திரும்பிய 70 வயது முதியவர் கொரோனா வைரஸால் உயிர் இழந்ததும், மக்களின் பீதி இன்னும் அதிகரித்திருக்கின்றது. கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு பல்வேறு ஆலோசனைகளை சுகாதாரத்துறை வழங்கிவருகின்றது.

vijay devarakonda seithipunalக்கான பட முடிவுகள்

ஒரு மீட்டர் இடைவெளியில் ஒருவரிடமிருந்து பேச வேண்டும் என்றும், தொட்டுப் பேசக்கூடாது என்றும் காற்றின் மூலம் பரவ வாய்ப்பிருப்பதால் மாஸ்க் அணிந்து செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டது. 

இந்நிலையில் மாஸ் நடிகர் விஜயதேவரகொண்டா கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றார். 

அந்த வீடியோவில் 'உங்கள் கைகளை அடிக்கடி கழுவுங்கள், வாழ்த்துக்களை பரிமாறி கொள்வதற்காக கைகுலுக்குவதை தவிருங்கள். அதற்கு பதில் இரன்டு கைகளையும் கூப்பி நமஸ்காரம் அல்லது நமஸ்தே என இந்திய பாணியில் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்" என்று கூறியிருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay devarakonda release request video about corona virus


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->