வாழைத்தண்டு சாறு குடித்தால் யூரிக் அமிலம் குறையுமா.! உண்மை என்ன.?! - Seithipunal
Seithipunal


ஆரோக்கியமற்ற சமச்சீரற்ற உணவு நம்மை அறியாமலேயே நம் உடலை பல நோய்களுக்கு ஆளாக்கி விடுகின்றன. புரதத்தின் அளவு நம் ரத்தத்தில்  அதிகரிக்கும் போது அவை  யூரிக்  அமிலத்தின் எண்ணிக்கையை ரத்தத்தில் அதிகமாக்க  செய்கிறது. இதன் காரணமாக கை கால் வலி விரல்களில் வீக்கம்  மூட்டு வலி ஆகியவை ஏற்படுகின்றன. சிறுநீர் கல் ஏற்படுவதற்கும் இது ஒரு முக்கிய காரணமாகும். நம் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையில் என்னென்ன மாற்றங்களை செய்வதன் மூலம் இந்த யூரிக் அமிலத்தின் பாதிப்பிலிருந்து  நம்மை காத்துக் கொள்ளலாம் என பார்ப்போம்.

யூரிக் அமிலம் அதிகமாக இருப்பவர்கள் சிவப்பு இறைச்சிகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. ஆடு, மாடு மற்றும் பன்றி இறைச்சிகளில் அதிகமான அளவு ப்ரோட்டீன் இருப்பதால் இவை ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்க கூடும். இதன் காரணமாக இந்த இறைச்சிகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்,துரித உணவுகள், நூடுல்ஸ் போன்ற உணவு வகைகளை அறவே தவிர்க்க வேண்டும். இனிப்பு அதிகமாக உள்ள பழங்களையும்  தவிர்த்துக் கொள்வது  யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்து உதவும்.வைட்டமின் சி அதிகமாக உள்ள பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் இவை உடலில் நீர் சத்துக்களை அதிகரிப்பதோடு  யூரிக் அமிலம்  உடலில் இருந்து வெளியேற உதவி புரிகின்றன. சாத்துக்குடி, ஆரஞ்சு,  தர்பூசணி போன்ற பழங்களை  பயன்படுத்தலாம்.

பொதுவாக நட்ஸ்கள்  உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கச் செய்யும் . ஆனால் பாதாம் மற்றும் வால்நட்சில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவதற்கான  மூலக்கூறுகள் இருக்கின்றன. இவற்றை அளவோடு  எடுத்துக் கொள்வதன்  மூலம்  யூரிக் அமிலத்தின் அளவை ரத்தத்தில் கட்டுப்படுத்த முடியும்.வாழைத்தண்டு சார்  யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த மருந்தாகும். வாழைத்தண்டு சாறு எடுத்து அதனுடன் மோர் மற்றும் உப்பு மிளகு கலந்து  நண்பகல் வேலை குடித்து வர  நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இதனை யூரிக் அமிலம் சிறுநீரக கல் அதிகமான அளவு இருக்கும் போது மட்டுமே குடிக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uric acid explanation and plaintain juice reduce uric acid levels


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->