நீண்ட அடர்த்தியான கூந்தலைப் பெற  இந்த 5 ஜூஸை ட்ரை பண்ணி பாருங்க! - Seithipunal
Seithipunal


நீண்ட அடர்த்தியான  பளபளப்பான கூந்தல்  ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு ஒரு கனவாகும். கூந்தலின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி என்பது மரபணுவை சார்ந்ததாக இருந்தாலும் எல்லோருக்கும் தங்களது  கூந்தலை நன்றாக பராமரித்து  பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் .

அவ்வாறு நமது கூந்தல்  பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் இருக்க  நாம் கண்டிஷனர் மற்றும்  ஷாம்பூ போன்ற  செயற்கையான பொருள்களை தேடிப் போக வேண்டியது இல்லை . நம் வீட்டில் இருக்கக்கூடிய உணவுப் பொருட்களைக் கொண்டே  நம் கூந்தலை அழகாக பராமரிக்க முடியும் . அவை என்னென்ன பொருள்கள் அவற்றால்  கூந்தலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்ப்போம்.

கீரைச்சாறு: கீரை கூந்தலின் நலனுக்கு  முக்கியமான பல ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது. கீரையில் இருக்கக்கூடிய  அதிகப்படியான இரும்புச்சத்துக்கள் மற்றும் பயோட்டின் நம் மயிர் கால்களுக்கு தேவையான ஆக்சிஜனை அதிக அளவில் கடத்துவதற்கு உதவுகின்றன.

வெள்ளரிக்காய் சாறு:  வெள்ளரிக்காய் அதிக அளவிலான ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் வைட்டமின்ஏ கொண்டுள்ளது. இவை  நச்சுக்களை வெளியேற்றவும் மற்றும் நீர் ஏற்றத்தையும் அதிகரிக்கிறது. இதனால் கூந்தல் உடைவது மற்றும் உதிர்வது தடுக்கப்படுகிறது.

நெல்லிக்காய் சாறு:  நெல்லிக்காய் ஒரு சிறந்த ஊட்டச்சத்து மிக்க  உணவாகும். இதில் இருக்கக்கூடிய  வைட்டமின் சி செல் சேதத்தை தடுத்து நம் கூந்தலின் ஆரோக்கியத்தையும்  வளர்ச்சியையும் தூண்டுகிறது.

கேரட் சாறு:  கேரட் வைட்டமின்கள் அதிகம் நிறைந்து ஒரு காய்கறி.  இதில் வைட்டமின் ஏ,இ  மற்றும் பி நிறைந்து இருக்கின்றன.  இதைத் தவிர அதிக அளவிலான ஆன்ட்டி ஆக்சிடென்ட்களும் உள்ளன. இவை நம் முடி வளர்ச்சியை  தூண்டுகிறது. மேலும் கேரட்டில் இருக்கக்கூடிய பீட்டா கரோட்டின் இளம் வயதிலேயே நரை ஏற்படுவதை தடுக்கிறது.

கற்றாழைச் சாறு:  கற்றாழையில்  நம் சருமத்திற்கும் கூந்தலுக்கும் ஆரோக்கியம் தரக்கூடிய ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.  இவற்றில் வைட்டமின் ஏ.இ மற்றும் சி நிறைந்திருக்கிறது.   இவை நம் உடலில் ஆரோக்கியமான செல் வளர்ச்சியை ஊக்குவித்து நம் கூந்தல்  பளபளப்பானதாகவும்  ஆரோக்கியமானதாகவும் இருக்க உதவி புரிகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

try these 5 juices to get a shining and thick hair


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->