ஏழைகளின் ஆப்பிளில் உள்ள மருத்துவம்.! - Seithipunal
Seithipunal


ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் தக்காளி எளிதில் நமக்கு கிடைக்கிறது. இதில் லைக்கோபெனின் எனும் வேதிப்பொருள் முழுமையாக இருப்பதுடன், பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, பி, பி2, ஏ, நார்ச்சத்து, செம்பு, இரும்பு, பொட்டாசியம் உள்ளிட்ட மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. உடலுக்கு குளிர்ச்சி தருகின்ற இந்த தக்காளியினை காயாகவும் பழமாகவும் பயன்படுத்தலாம்.

தக்காளியில், இதயம், நீரிழிவு மற்றும் புற்றுநோய்களை போக்கும் மருத்துவ குணம் உள்ளது. எலும்புகளுக்கு ஊட்டம் தரும், தக்காளிக்காயினை கீரை போல மசியல் செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

தக்காளிக்காய்,

பூண்டு,

வரமிளகாய்,

புளி,

வெங்காயம்,

கறிவேப்பிலை,

மஞ்சள்,

கடுகு,

பெருங்காயப்பொடி,

உப்பு,

நல்லெண்ணெய்.

செய்முறை:

முதலில் வாணலியில் சிறிதாக நறுக்கிய தக்காளி, பூண்டு, புளி, வெங்காயம், பெருங்காயப்பொடி, மஞ்சள்பொடி சேர்த்து வேகவைத்து இறக்கவும். பின் அந்த கலவையை நன்கு மசித்து வைத்து கொள்ள வேண்டும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கருவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, அதனுடன் மசித்த கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.

இந்த மசியலை சாதத்துடன் சாப்பிடும்போது, பசியை தூண்டுவதுடன், ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது. தக்காளியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால், பெப்டிக் அமிலத்தை சுரக்க செய்து, உடலில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. குறிப்பாக வயிற்றில் உருவாகும் சிறுகுடல், பெருங்குடல் புற்றுநோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomato health


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->