வாய்ப்புண்ணை எளிதில் குணப்படுத்த ஒரேயொரு துவையல்.!! - Seithipunal
Seithipunal


இன்றைய நிலையில் பெரும்பாலானோருக்கு பலவிதமான உடல் சம்பந்தமான பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக உடல் நலம் பாதிக்கவும் வாய்ப்புள்ளது. அந்த வகையில்., சிலருக்கு அடிக்கடி ஏற்படும் வாய்ப்புண்களை குணப்படுத்தவதற்கு உதவி செய்யும் துவையல் குறித்து இனி காண்போம். 

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளி கீரை - அரை கட்டு.,
பெருங்காயத்தூள் - 1 கரண்டி.,
காய்ந்த மிளகாய் - 2 எண்ணம்., 
பச்சை மிளகாய் - 2 எண்ணம்.,
உளுத்தம் பருப்பு - 1 மே.கரண்டி.,
பூண்டு - 10 பற்கள்.,
சின்ன வெங்காயம் - 15 எண்ணம்.,


மிளகு - 1 கரண்டி.,
தேங்காய் துருவல் - கால் கிண்ணம்.,
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு.,
உப்பு - தேவையான அளவு.,
எண்ணெய் - 1 கரண்டி.,

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட மணித்தக்காளி கீரையை எடுத்து கொண்டு நன்றாக சுத்தம் செய்து., சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கி எடுத்துக்கொள்ளவும். பின்னர் வானெலியில் எண்ணெய்யை ஊற்றி பெருங்காய தூள்., காய்ந்த மிளகாய்., உளுந்தம் பருப்பு நல்ல சிவந்த நிறத்துடன் மாறும் வரை வறுத்தெடுக்கவும். 

பின்னர் மிளகு., பூண்டு., பச்சை மிளகாய் நன்றாக வதக்கி வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி கொள்ளவும். பின்னர் இதனுடன் மணித்தக்காளி கீரையை சேர்த்து., தேங்காய் துருவலை வதக்கி அடுப்பில் இருந்து இறக்கி சூடு குறைந்த பின்னர் அரைத்து புளி மற்றும் உப்பை சேர்த்து கெட்டியாக அரைத்து சாப்பிடவும். 

English Summary

to cure mouth pain and diseases to use this manithakkali keerai thvuaiyal


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal