நீரழிவு நோயை கட்டுபடுத்த பழங்களை எவ்வாறு உண்ணலாம் இதோ சில டிப்ஸ்.! - Seithipunal
Seithipunal


நீரழிவு நோய் இருக்கிறது என்றாலே  அவர்கள் பொதுவாக  பழங்களைத் தவிர்க்க வேண்டும் என்று தான்  அறிவுறுத்தப்படுவார்கள். இதனால், பழங்களில் இருக்கின்ற வைட்டமின்கள், நார் சத்துக்கள், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நம் உடலுக்கு கிடைக்காமல் போகும். நீரிழிவு நோய் இருப்பவர்கள்  கிளைசிமிக் இன்டெக்ஸ்  குறைவாக இருக்கின்ற பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம்  அவர்களின் சர்க்கரை நோய்  கட்டுக்குள் இருப்பதோடு  பழங்களிலிருந்து கிடைக்கின்ற வைட்டமின்களையும்  பிற சத்துக்களையும் நாம் பெறலாம். 

சர்க்கரை நோயாளிகள் என்னென்ன பழங்களை சாப்பிடலாம்  எவ்வாறு சாப்பிடலாம் என்று பார்ப்போம் .

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பழங்களை தான் சாப்பிட வேண்டும் என்று நாம் குறிப்பிட்டு கூற இயலாது. நம் இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரையின் அளவை வைத்து தான் முடிவு செய்ய முடியும். இரத்தத்தில்  சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 150 முதல் 200 கிராம்  பழங்களை சாப்பிடலாம் .

இரத்தத்தில் சர்க்கரை அளவு  அதிகமாக இருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு நூறு கிராம் அளவிற்கு தான் பழங்களை எடுக்க வேண்டும். மேலும், அவர்கள்  இந்தப் பழங்களை  உணவோடு சேர்த்து சாப்பிடக்கூடாது. மேலும் கார்போஹைட்ரேட் உள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால் பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோய் இருப்பவர்கள் சாப்பாட்டிற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது . மேலும் பழங்களுடன் புரதம் அதிகம் உள்ள பொருட்களை  சேர்த்து சாப்பிடுவது நல்லது. இதனால் பழங்களை நட்ஸுடன்  சேர்த்து சாப்பிடலாம் .

சர்க்கரை நோய் இருப்பவர்கள் ஆப்பிள், ஆரஞ்சு,  பப்பாளி  கொய்யாப்பழம்  மற்றும் எலுமிச்சை  ஆகியவற்றை  எடுத்துக் கொள்வது நல்லது. இவற்றில் கிளைசெமிக் அளவு குறைவு. மேலும், இதில் வைட்டமின் சி  மற்றும் சிட்ரிக் அமிலங்கள் அதிக அளவில் நிறைந்து இருக்கின்ற  பழங்களாகும். மேலும் இவை நம் உடலின்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியையும் தூண்டுகிறது .

சர்க்கரை நோய் இருப்பவர்கள் மாம்பழம், சப்போர்ட்டா, வாழைப்பழம், பலாப்பழம், கிரேப்ஸ் ஆகியவையை அதிகமாக  சாப்பிடக்கூடாது. இந்தப் பழங்களில் கிளைசெமிக் அளவு அதிகம்  இதனால்  இந்தப் பழங்களை கூடுமான அளவு  தவிர்த்துக் கொள்வது நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tips to have fruits for diabetes


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->