நீரழிவு பிரச்சனை உள்ளவர்கள் கவனத்திற்கு...! - Seithipunal
Seithipunal


நீரழிவு நோயாளிகள் வெளியிடங்களில் தங்க நேரும்போது   திடீரென்று இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகாமல்  இருக்க என்ன செய்யலாம்? சில டிப்ஸ் !

எங்கு சென்றாலும் நீரழிவுக்கான மாத்திரைகளை இன்சுலின்களை கையுடன் வைத்திருப்பது, மிக மிக முக்கியமானது. அங்கு சென்றபின் வாங்கி கொள்ளலாம் என்ற நினைப்பே வரக்கூடாது.

வெளியிடங்களில் சாப்பிட நேரும்போது புதுவிதமான உணவுகளை உண்ணுவதை தவிர்த்து கொள்ளலாம். இல்லையென்றால் மிகவும் குறைவான அளவில் அதை எடுத்துக்கொண்டு எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை  உண்ணலாம்.

முடிந்த அளவு உடற்பயிற்சிகள் அல்லது நடைப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இதனால் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சமன்படும்.

வெள்ளரிக்காய், ஆப்பிள், வேகவைத்த கொண்டக்கடலை, சப்பாத்தி, சீரக தண்ணீர் முதலியவற்றை வீட்டிலிருந்தே எடுத்து சென்று விடுவதால் பயணத்தில் இருக்கும்போது வெளியில் விற்கப்படும் பானங்களை, தின்பண்டங்களை வாங்காமல் தவிர்த்துக்கொள்ளலாம்.

சர்க்கரை அளவு குறைவது போன்ற பிரச்சனைகளுக்கு கையிருப்பில் ஒரு சாக்லேட் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tips to avoid sugar spikes while we diabetes patients in travelling


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->