கை, கால் மூட்டுகளில் உள்ள கருமையை போக்க எளிய வழி ! - Seithipunal
Seithipunal


மூட்டுகளில் கருமை வருவதற்கு காரணம், அங்கே மெலனின் செல்களின் சுரப்பு அதிகமாகியிருக்கும். இறந்த செல்கள் தங்கி, அந்த இடம் பாதிப்படைந்து கருமையாக காண்பிக்கிறது.

இப்படி இந்த கருமையை போக்கி சருமத்தை ஒரே நிறத்தில் இதனை கொண்டு வருவது எப்படி? நீங்கள் எத்தனையோ க்ரீம்களை தடவியும் பிரயோஜனம் இல்லாமல் அப்படியே இருக்கிறதா? கவலையை விடுங்கள். இந்த இயற்கையான அழகுக் குறிப்பை பயன்படுத்துங்கள். பலன் எளிதில் கிடைக்கும்.

தேவையானவை : சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன் சமையல் சோடா – 2 டீ ஸ்பூன் சோற்றுக் கற்றாழை – 1 டேபிள் ஸ்பூன்

இந்த கலவை மூட்டுகளில் தினமும் தேய்த்து வந்தால், அங்கு தேங்கியிருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, புதிய செல்கள் உருவாகும். இவை சருமத்தில் ஆழமாக சென்று, அழுக்குகளை நீக்குகிரது. இதனால் மெல்ல மெல்ல கருமை போய்விடும். சமையல் சோடா கருமையை போக்கும் இயற்கையான ப்ளீச்சாக செயல்படுகிறது. சருமத்தை பளிச்சென்று ஆக்கிவிடும்.

செய்முறை : மேலே சொன்ன மூன்றையும் நன்றாக கலந்து, மூட்டுகளில் சில நிமிடங்கள் தேய்க்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து, கழுவலாம்.

தினமும் இதனை செய்யுங்கள் 2 வாரங்களிலேயே கருமை போய்விடும். இன்னும் விரைவான ரிசல்ட் கிடைக்க தினம் காலை மாலை என இருவேளைகளிலும் பயன்படுத்துங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tips for girls


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->