ஒரே ஒரு ஸ்பூன் தான்.. ஒட்டுமொத்த பிரச்சனையும் குளோஸ்.! இதை சாப்பிட்டால் போதும்.!  - Seithipunal
Seithipunal


உடலில் இருக்கும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது வெல்ல. மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் பி மற்றும் விட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் வெள்ளத்தில் இருக்கின்றது. 

மேலும், விட்டமின் ஏ, ஈ மற்றும் விட்டமின் டி உள்ளிட்ட சத்துக்கள் சுத்தமான நெய்யில் இருக்கின்றது. இதில், எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்ற விட்டமின் கே-வும் இருக்கின்றது. 

ஆகவே, வெல்லம் மற்றும் நெய் இரண்டையும் கலந்து உடலுக்குள் எடுத்துக் கொள்ளும் போது அளப்பற்ற நன்மைகள் கிடைக்கின்றன.

மதிய உணவிற்கு பின்னர் ஒரு தேக்கரண்டி நெய்யில் சிறிதளவு வெல்லத்தை கலந்து சாப்பிடலாம். இதன் மூலம், மதிய உணவிற்கும் இரவு உணவிற்கும் இடையில் ஏற்படும் பசியை தவிர்க்கலாம். 

பலரும் மதிய உணவிற்கும் இரவு உணவிற்கும் இடையில் அதிக கலோரிகள் கொண்ட பஜ்ஜி, வடை போன்ற ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிடுவார்கள். இதுதான் தொப்பையை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கும். இந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ள நெய் மற்றும் வெல்லத்தை கலந்து ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளும்போது அந்த உணர்வு கட்டுப்படுத்தப்படுகிறது. 

எனவே தேவையற்ற கலோரிகள் உடலில் ஏறுவதை தவிர்க்கலாம்.
இதன் மூலம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை பராமரிக்கவும், உடலில் இருக்கும் நச்சுத் தன்மையை நீக்கவும் இவை உதவுகின்றன.

பொதுவாக நெய் சாப்பிட்டால் அது உடலில் சரும பொலிவை ஏற்படுத்தக் கூடியது. எனவே, வரண்ட சருமம் இருப்பவர்களின் சருமத்தில் நல்ல கொழுப்புகள் சேருவதால் சருமம் பொன் போல மின்னுவதை உணர முடியும். 

இந்த நெய் மற்றும் வெல்லக் கலவையினால் நகங்கள் மற்றும் முடி வளர கூடும். 

உடல்நலம் மட்டுமல்லாமல் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் இது உதவும். எனவே, அன்றாடம் நெயில் கலந்த வெல்லத்தை ஒரு ஸ்பூன் சாப்பிடுவது நமக்கு பல்வேறு விதத்தில் நன்மை பயக்கக் கூடியது. 

இந்த பழக்கத்தை சிறு வயது முதலே குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் போது அவர்கது ஆரோக்கியமும், நோய் எதிர்ப்புச் சக்தியும் மேம்படுகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

These Shake will make You stronger


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->