உங்கள் பல் வெள்ளையாக இதை செய்து பாருங்க., உடனடி பலன்.! - Seithipunal
Seithipunal


அனைவருக்குமே தங்களுடைய பற்கள் வெண்மை நிறமாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் இருக்கும். ஆரம்ப காலகட்டத்தில் நாம் சாம்பல், கரி, உப்பு, வேப்பங்குச்சி, ஆலங்குச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தி வந்தோம். 

அப்போதெல்லாம் நமது பற்கள் வெண்மையாக இருப்பது குறித்து நமக்கு எந்த கவலையும் இருந்ததில்லை. ஆனால், தற்போது சினிமா திரைப்படங்கள் வந்த பிறகு நம்முடைய சிகை அலங்காரம், உடல் அலங்காரம் குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

அதில் ஒரு அங்கமாக தற்போது பற்களை வெண்மையாக வைத்திருக்க நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நம்முடைய முயற்சிகளுக்கு ஏற்ற போல் பல நிறுவனங்களும் எங்களுடைய பற்பசையை பயன்படுத்தினால், உங்கள் பற்கள் வெண்மை நிறமாக மாறிவிடும் என்ற விளம்பரங்களை அவ்வபோது அறிவித்து வருகின்றனர்.

ஆனால், உண்மையில் நாம் முன் பற்களை வெண்மையாக வைத்துக் கொள்ள சில உணவு பழக்கங்கள் மூலமாகவும் இதனை செய்யலாம். அது எப்படி என்று பார்ப்போம் .

லாக்டிக் அமிலம் :

பால், பாலாடைக்கட்டி, தயிர் போன்ற பால் பொருட்களில் கேசீன், லாக்டிக் அமிலம் உள்ளடங்கி இருக்கும். கால்சியமும் நிறைந்திருக்கும். இது உமிழ்நீர் உற்பத்தியை ஊக்குவிக்கும். அத்துடன் பற்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்குவதற்கும் வித்திடும். கேசீன் பிளீச்சிங் ஏஜென்ட் போல் செயல்படக்கூடியது. அது பற்களின் மேற்பரப்பில் உள்ள கறைகளை போக்குவதுடன் பற்களை வெண்மையாக்குவதற்கும் உதவும்.

மாலிக் அமிலம் :

ஸ்ட்ராபெர்ரி பழத்திற்கும் பற்களை வெண்மையாக்கும் தன்மை உண்டு. இது பல் சிதைவு, நிறம் மாறுதல், பிளேக் போன்ற பல் பிரச்சினைகளுக்கு நிவாரணம் தரும். ஸ்ட்ராபெர்ரியில் நிறைந்துள்ளது. இது பிளீச்சிங் போல் செயல்பட்டு பற்களை பளிச்சிட வைக்கும் தன்மை கொண்டது.

ஒரு ஸ்ட்ராபெர்ரி பழத்தை துண்டுகளாக நறுக்கி நன்றாக மசித்துக் கொள்ளவும். அதனுடன் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து, குழைத்துக்கொள்ளவும். பேஸ்ட் போல இதை பயன்படுத்தி பிரஷ் கொண்டு பல் துலக்கி வரலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.

ஆப்பிள் பழத்தில் இருக்கும் மாலிக் அமிலம் இயற்கையாகவே கறைகளை நீக்கும் தன்மை கொண்டது. ஆப்பிள் சாப்பிடுவது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கவும் உதவும். ‘சீஸ்’ எனப்படும் பாலாடைக்கட்டிகளை மென்று சாப்பிடுவதும் பற்களை வெண்மையாக்க உதவும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teeth Care


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->