இரவு நேரத்தில் தூக்கத்தை கெடுக்கும் இருமலுக்கு தீர்வு இது தான்.! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலத்தில் பெரும்பாலானோர் இரவு நேரத்தில் அதிகளவு இருமலால் அவதிருவது வழக்கம். இரவு நேரத்தில் அயர்ந்து உறங்கிக்கொண்டு இருக்கும் சமயத்தில் திடீரென தொண்டையில் எதோ ஒன்று சிக்கியிருப்பது போல., கடுமையான இருமலால் அவதியுறுவார்கள். 

இந்த பிரச்சனையால் அவதியுறும் பட்சத்தில்., தொண்டையில் புண்., உடற்சோர்வு., எரிச்சல் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் பாதிப்பு போன்ற பிரச்சனையில் அவதியுற நேரிடும். இதனை சரி செய்வதற்காக எளிய இயற்கை முறைகளை பற்றி காண்போம்.  

சூடான பாலில் சிறிதளவு மஞ்சளை சேர்த்து நன்றாக கலக்கி சிறிதளவு தேனை சேர்த்து குடித்து வந்தால் வறட்டு இருமல் பிரச்சனை மற்றும் நோய் தொற்று போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். 

அரை தே.கரண்டி மிளகு தூளுடன் அரை தே.கரண்டி நெய்யை சேர்த்து கலக்கி காலையில் வெறுமையான வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் பிரச்சனையானது குறையும். 

சிறிதளவு இஞ்சி துண்டை எடுத்து கொண்டு வாயின் ஓரத்தில் ஒதுக்கிவைத்து கொண்டு நாள் முழுவதும் இருக்கும் பட்சத்தில் வறட்டு இருமல் பிரச்சனை சரி செய்யப்பட்டு., செரிமான கோளாறு பிரச்சனையும் சரியாகி உடல் ஆரோக்கியமானது மேம்படும். 

இரண்டு தே.கரண்டி எலுமிச்சை சாற்றினை எடுத்துக்கொண்டு., ஒரு தே.கரண்டி தேனை கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் பிரச்சனையானது விரைவாக சரியாகும். 

5 தே.கரண்டி தேனுடன் 2 தே.கரண்டி தேங்காய் எண்ணையை 1 தே.கரண்டி எலுமிச்சை சாறுடன் சேர்த்து வானெலியில் சிறிதளவு சூடேற்றி கலக்கி., சூடு ஆறியதும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் பிரச்சனையானது சரியாகும். 

கற்றாழை செடியில் இருக்கும் ஜெல்லை தேனில் கலந்து காலை வெறும் வயிற்றுடன் சாப்பிட்டு வந்தால்., வறட்டு இருமல் பிரச்சனை சரி செய்யப்பட்டு., உடலின் ஆரோக்கியமானது அதிகரிக்கும். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

solution for irumal


கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
Seithipunal