ஆடைகள் இன்றி உறங்கினால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?..!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள பெரும்பாலானோர் நமது உடல்நலம் குறித்து எந்த விதமான அக்கறையும் கொள்ளுவதில்லை. தினமும் பல விதமான ஆரோக்கியம் குறித்து செய்திகளை படித்தாலும்., பார்த்தாலும் அதனை கடந்து செல்கிறோம். சிறிதளவு கூட அதனை மேற்கொள்ளும் நடவடிக்கையை கையால்வதில்லை.

நாம் வேலை செய்தாலும்., செய்யாவிட்டாலும் கட்டாயம் தினமும் உறங்குங்கள் என்று கூறிக்கொண்டு இருந்தாலும்., பெரும்பாலானோருக்கு தூக்கம் என்பது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. 

தூங்காமல் இருக்கும் பட்சத்தில் நமது உடலில் பல விதமான பிரச்சனைகள் ஏற்படும். சரியான தூக்கம் நமக்கு இல்லையெனில் ஹார்மோன்களின் வளர்சிதை மாற்றம்., மன அழுத்தம்., உடல் பருமன் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். 

sleeping, sleeping images,

மேலும்., மேற்கூறியுள்ள பிரச்சனைகளை சரி செய்ய நமது உறக்கமே நல்ல வழிவகை செய்யும். மேலும்., இரவில் உறங்கும் போது ஆடைகள் இன்றி உறங்க பலருக்கு சில நேரம் தோன்றியிருக்கும். 

அந்த வகையில்., இரவு நேரத்தில் ஆடைகள் இன்றி உறங்கினால் உடலுக்கு பல நன்மைகள் கிடைப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது. இரவு நேரத்தில் ஆடைகள் இன்றி உறங்குவதால் உடலின் வெப்பம் குறைந்து., நமது மனஅழுத்தம் குறைக்கும். 

இதுமட்டுமல்லாது உடலின் வெப்பத்தின் அளவு குறைவதால் இரத்த ஓட்டம் சீராகி., உடல் குளிர்ச்சியை அடைந்து உடலின் எடை குறைக்கப்படுகிறது. உடலில் ஆடைகள் இன்றி உறங்குவதால் தன் மீதான நம்பிக்கை அதிகரிக்கும் என்று உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sleeping without dress is good for health


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->