எண்ணெயை இப்படி யூஸ் பன்னினா அவ்வளவு தான்.. உஷார்..! - Seithipunal
Seithipunal


சமையலில் தவிர்க்க முடியாத ஒன்று சமையல் எண்ணெய். அனேகமான எல்லா  உணவுப் பொருள்கள் தயாரிப்பிலும்  எண்ணெய் இன்றியமையாததாக இருக்கின்றது. இந்த எண்ணெயின் மூலம் நமக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைத்தாலும்  அவற்றை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் போது நம் உடலுக்கு ஏராளமான தீமைகளை விளைவிக்கின்றன.

சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் நாம் சூடுபடுத்தும் போது அதில் இருக்கக்கூடிய வேதிப்பொருட்கள் ஆல்டிஹைடுகள் மற்றும் நச்சுத்தன்மையுள்ள தனிமங்களை  உருவாக்குகின்றன. இவற்றின் தாக்கத்தின் காரணமாக  புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது .

உணவு தயாரிக்க உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்தும் போது எல்டிஎல் கொழுப்புகளை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. இந்த எல்டிஎல் அல்லது கெட்ட கொழுப்புக்களின் எண்ணிக்கை  நம் உடலில் அதிகமாகும் போது இதயநோய், பக்கவாதம் போன்ற  நோய்கள் நமக்கு ஏற்பட்டுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெயிலேயே மீண்டும் சமைக்க பயன்படுத்தும் போது   அதில் இருக்கக்கூடிய கனிமங்கள் உடைந்து நச்சுத்தன்மையுடைய வேதிப்பொருட்களை  உருவாக்குகின்றன. இவற்றின் தாக்கத்தினால்  அஜீரணக் கோளாறு  செரிமான பிரச்சனை  போன்றவை ஏற்படுகிறது.

சமையல் எண்ணெய் நாம் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்று. சமையலறையில் தினமும் அதிகமாக செலவாகும் ஒரு பொருள். அதனால் அவற்றை நாம் மறுசுழற்சி செய்யவே  முயற்சி செய்வோம். சுத்திகரிக்கப்பட்ட  சமையல் எண்ணெயை பயன்படுத்தாமல்  செக்கிலாட்டப்பட்ட எண்ணெயை ஒரு சுத்தமான துணியின் மூலம் வடிகட்டி அவற்றை நம்மால் மீண்டும் பயன்படுத்த இயலும். இது நமது உடல் நலத்திற்கும் அவ்வளவு தீங்கு ஏற்படுத்தாது.

மேலும் இவ்வாறு வடிகட்டி பயன்படுத்தப்படும் எண்ணெயை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே  வைத்து பயன்படுத்த வேண்டும். மேலும் இவற்றை அதிக அளவு சமையலுக்கு பயன்படுத்தாமல் சிறிய அளவில் தாளிப்பது போன்றவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு பயன்படுத்தும் போது எந்தவிதமான தீய விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Side effects of reusing of oil and good tips to reuse oil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->