இந்த நேரங்களில் தண்ணீர் குடிக்கவே கூடாது..! தெரிந்து கொள்ளுங்கள்.. கவனமாக இருங்கள்.! - Seithipunal
Seithipunal


நீர் மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று. நீரில்லாமல் எந்த உயிரினமும் இப்புவியில் வாழ முடியாது. இந்த பூமியின் எழுபது சதவீதம் நீரால் ஆனது என அறிவியல் உண்மை கூறுகின்றது. மேலும், நம் உடலின் பெரும்பகுதி நீரால் ஆனது. நீரின்றி அமையாது உலகு என திருக்குறள் நீரின் மேன்மை தன்மையையும் தண்ணீரின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் விதமாக அமைந்திருக்கிறது. 

உடலில் ஏற்படும் பாதிப்புகள் :

பலர் தூங்குவதற்கு முன்னால் தண்ணீர் குடிப்பார்கள். இரவு நேரத்தில் கிட்னி சற்று மெதுவாகவே வேலை செய்யும். இதனால், உங்களின் முகம் காலையில் எழுந்தபிறகு வீங்கி இருக்கும். இரவு நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் தூக்கமும் கெடுக்கப்பட கூடும்.

சாப்பிடும் போதும், சாப்பிட்ட பிறகும், சாப்பிடுவதற்கு முன்பும் எல்லா நேரத்திலும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது. இதனால், செரிமான கோளாறு ஏற்படும்.

உடலில் பாதிப்பை சந்திக்கும் முதல் உறுப்பு கிட்னி தான். அதிகமான தண்ணீர் கிட்னியின் செயல்திறனை குறைத்து விடும். ரத்த ஓட்டத்தையும் பாதிக்கும்.

உடல் எடையை குறைக்கும் எண்ணத்தில் பலர் மிகவும் வேகமாக உடற்பயிற்சிகளை செய்வர். பிறகு அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பார்கள். இதனால் உடலின் தட்பவெப்பம் உயர்ந்து மயக்கம், தலை வலி, வாந்தி போன்றவை வரக்கூடும்.

பாட்டிலில் நீர் அருந்தினால் ஏற்படும் விளைவுகள் :

பாட்டிலில் நீர் அருந்தினால் புற்றுநோய், உடல் பருமன், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் உருவாகும். பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை குடிக்க வேண்டாம்.

தாகம் எடுக்கிறது என்று தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது. இது மிகப்பெரிய ஆபத்தை தரும். உடலில் உள்ள சோடியத்தின் அளவை குறைத்து விடும். உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

இதன் அவசியம் : 

12 அவுன்ஸ் தண்ணீர் நீங்கள் குடித்தால் 8 அவுன்ஸ் தண்ணீரை உடல் 15 நிமிடத்தில் உறிஞ்சிவிடும்.

நாள் ஒன்றுக்கு எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

should not drink water this time


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->