கேரளாவில் நிபா வைரஸ்...! சுகாதாரத் துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...! பாதிப்போர் பட்டியலில்...?
Nipah virus in Kerala Shocking information released by Health Department List of affected people
கேரளாவில் கடந்த சில மாதங்களாக 'நிபா வைரஸ்' தாக்கம் அதிகமாகவுள்ள நிலையில், வைரஸ் பாதிப்பு காரணமாக 2 பேர் இறந்துள்ளனர். இதைத்தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.அதிலும் குறிப்பாக மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் எர்ணாகுளம் மாவட்டத்தில் தான் இந்த பாதிப்பு அதிகமாகவுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்ததில் 609 பேர் நிபா தொடர்பு பட்டியலிலிருப்பது தெரியவந்தது. இதில் 38 பேர் அதிக ஆபத்துள்ள கண்காணிப்பிலும், 133 பேர் அதிக ஆபத்துள்ளவர்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், மலப்புரத்தில் 207 பேரும், பாலக்காட்டில் 286 பேரும், கோழிக்கோட்டில் 114 பேரும், எர்ணாகுளத்தில் 2 பேரும் நிபா தொடர்பு பட்டியலில் அடங்குவார்கள்.
இந்த பகுதிகளில் சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. காய்ச்சல் கண்காணிப்பை மேற்கொண்டு வரும் அவர்கள், தேவையற்ற மருத்துவமனை வருகைகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நண்பர்கள், உறவினர்களை பார்ப்பதை குறைக்க வேண்டும், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள், நோயாளிகள் அவர்களது உறவினர்கள் எல்லா நேரங்களிலும் முககவசம் அணியவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
English Summary
Nipah virus in Kerala Shocking information released by Health Department List of affected people