நாம் பிரியாணியில் பயன்படுத்தும் அன்னாசி பூவில்  இந்த நோய்க்கான மருந்து இருக்கிறதா!? - Seithipunal
Seithipunal


நாம் அசைவ உணவுகளிலும் பிரியாணியிலும் வாசனைக்காக பயன்படுத்தப்படும் அன்னாசி பூ, நம் உடலுக்கு தேவையான பல்வேறு விதமான நன்மைகளை கொண்டிருக்கிறது. இதிலிருந்து கிடைக்கக்கூடிய அமிலங்கள் பல்வேறு கொடிய நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன. இந்த அன்னாசி பூவில் லினாலூல்,குவெர்செடின், அனெத்தோல்,ஷிகிமிக் அமிலம், காலிக் அமிலம், லிமோனென் ஆகிய அமிலங்கள் நிறைந்திருக்கின்றன.

இந்த அன்னாசி பூவில்  இருக்கக்கூடிய ஷிகிமிக் அமிலம், இதிலிருந்து ஓசெல்டமிவிர் என்ற மருந்தானது தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்து  ஸ்வைன் ஃபுளு என்று சொல்லக்கூடிய பன்றி காய்ச்சலுக்கு முக்கியமான தடுப்பு மருந்தாகும்.

இந்த அன்னாசி பூவில் இருக்கக்கூடிய அமிலங்கள் வைரஸ் எதிர்ப்பு தன்மைகளை உள்ளடக்கியவை. இவை பண்டைய சீன மருத்துவங்களில் நமது நாட்டின் ஆயுர்வேத மருத்துவங்களில்  அதிகமாக மருத்துவத்திற்கு  பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை கிருமிகளால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் சளி ஆகியவற்றிற்கு சிறந்த எதிர்வினை ஆற்றுகின்றன.

 

இவற்றில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடெண்ட்கள் நம் உடலின் செல்கள் சேதம் அடைவதை தடுத்து கேன்சர் செல்கள் உடலில் உருவாவதை தடுக்கிறது. மேலும் இதில் இருக்கக்கூடிய அமிலங்கள்  நிக்கோடினுக்கு  எதிரான பண்புகளை கொண்டிருக்கிறது.

அன்னாசி பூவில் இருக்கும் லினாலூல் என்று அமிலம்  நம் மனநிலையை மேம்படுத்தி  உடலினை அமைதி படுத்தக்கூடிய தன்மை கொண்டது. இது மன அழுத்தம் போன்ற நோய்களில் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த ஒரு இயற்கை மருந்தாக பயன்படுகிறது.

இது தாமிரம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, செலினியம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட தாதுக்களின்  சிறந்த மூலமாகவும். நம் உடலின் வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவி புரிகிறது. உடலின்  இரத்த  ஓட்டத்தினையும் சீராக வைக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Medical benefits of star anise


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->