நெல்லிக்கனியை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா.!? - Seithipunal
Seithipunal


நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்:

இயற்கையோடு ஒன்றிவாழ்ந்த நம் தமிழ் முன்னோர்கள் உணவு முதல் மருந்து வரை இயற்கையின் வளங்களை பயன்படுத்தி வந்தனர்.அதனால் அவர்களின் ஆயுட்காலமும் 100 க்கும் அதிகமாக இருந்தது.இன்றைய சூழ்நிலையில் மனிதன் நவீனம் என்ற பெயரில் உடல்பருமன்,சிறுவயதிலே கண் குறைப்பாடு ,இளநரை,சொத்தைப்பல்,நீரிழிவு நோய் என நோய்களை விலைகொடுத்து வாங்கிவிட்டான். இன்று ஒருவர் 100 வயதை அடைந்தாலே விழா கொண்டாடும் அவலம் நம்மிடையே வந்துவிட்டது.காரணம் ,நமது ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை வெறும் ருசிக்காக சாப்பிட்டு தீய கொழுப்புகளை மட்டும் சேர்த்து உடலினை பராமரிக்க மறந்துவிட்டோம்

நம் முன்னோர்கள் உணவை மருந்தாக பயன்படுத்தினர் .ஆனால் நாம் மருந்தைத்தான் உணவாக பயன்படுத்துகிறோம்

இந்த நிலையை முழுமையாக மாற்ற தற்போது இயலவில்லை என்றாலும் அதற்கான முயற்சியை செய்தால் தான் நம் அடுத்த தலைமுறை ஆரோக்கியமானதாக அமையும்.அதற்கு என்ன செய்ய வேண்டும்?

நாம் மறந்து போன ,மறைந்து போன நமது ஆரோக்கியமான பாரம்பரிய பண்டங்களை ,உணவுகளை மீண்டும் அறிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் .அந்த வகையில் நம் தமிழர்கள் பயன்படுத்திய உணவு மருந்துகளில் ஒன்று "நெல்லிக்காய்"நெல்லிக்காய்க்கும் ,தமிழர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை பலவழிகளில் அறியலாம்.ஆயுர்வேத சாஸ்திரம் முதல் சங்ககால செய்யுள்கள் வரையிலும் நெல்லிக்காயை பற்றி சொல்லாத இடங்களே இல்லை.அந்த அளவிற்கு நெல்லிக்காயின் பயன்கள் அளவில்லாதது

தினசரி நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையுடன் வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்பிகளில் எழுதி வைத்துள்ளனர். உடல் நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. இதிலும் கடுக்காயைப்போலவே இதில் பல வகையுண்டு பெருநெல்லி, கருநெல்லி, அருநெல்லி, என்பது. இதில் கருநெல்லி கிடைக்காதது. மற்றவை விளையும் இடங்களில் கிடைக்கும்.

நெல்லிக்கனிகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று, ரத்த ஓட்டத்தை நன்கு தூண்டி தோலில் சுருக்கங்கங்கள் போன்றவை ஏற்படுவதை தடுத்து, இளமையான தோற்றத்தை நீட்டிக்க செய்கிறது. இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி சத்து சருமத்திற்கு இலகுவான தன்மையை தருவதோடு தோல் புற்று நோய்கள் ஏற்படாமலும் காக்கிறது.

உடலில் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தை பாய்ச்சும் உறுப்பு இதயம். இதயத்தின் செயல்பாடுகள் எப்போதும் சீராக இருக்கின்ற வகையில் உதவக்கூடிய இயற்கை உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும். நெல்லிக்கனிகளை அடிக்கடி சாப்பிடும் போது அதிலுள்ள புளிப்பு தன்மை கொண்ட ரசாயனங்கள், இதயத்தில் ரத்தம் உறைதல், அடைப்பு போன்றவை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் நெல்லிக்காயில் இருக்கின்ற குரோமியம் சத்து ஆர்த்திராஸ்கிலேரோசிஸ் எனப்படும் இதயம் சம்பந்தமான பாதிப்புகள் உண்டாகாமல் தடுக்கிறது.

உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வடிகட்டி வெளியேற்றுவது சிறுநீரகங்கள். ஒரு சிலருக்கு சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நீர்ச்சத்து அதிகம் நிறைந்த நெல்லிக்கனி இயற்கையிலேயே ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கியாக இருக்கிறது. மேலும் நெல்லிக்கனியில் இருக்கின்ற சாற்றிற்க்கு சிறுநீரகங்களில் படிகின்ற சிட்ரேட் மற்றும் கால்சியம் படிமங்கள் கற்களாக மாறுவதை தடுத்து, அவைகளை கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. எனவே சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க நினைப்பவர்கள் நெல்லியை அதிகம் உண்ண சிறுநீர் நன்கு பிரியும்.

நம்முடைய உடலில் முக்கியமான உறுப்பு கண்கள். நெல்லிக்காய்களில் பல வகையான வைட்டமின் சத்துகள் உள்ளன. குறிப்பாக நெல்லிக்காயில் வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்துள்ளதுஇந்த வைட்டமின் ஏ சத்து நமது கண்களில் விழி படலங்களில் ஏற்படும் அழுத்தங்களை குறைத்து எதிர்காலங்களில் கண்புரை, கண் அழுத்தம் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் காக்கிறது. இதை அடிக்கடி உண்பவர்களுக்கு வயதாவதால் ஏற்படும் கண்பார்வை குறைபாடுகள் போன்றவையும் நீங்கும். கண்பார்வை தெளிவும் ஏற்படுகிறது.

நம் வாழ்நாளின் இறுதிவரை நமது உடலில் வலுவாக இருக்க வேண்டியது எலும்புகள். நெல்லிக்கனியில் எலும்பின் வளர்ச்சிக்கும், வலுவிற்கும் தேவையான வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம், கால்சியம் சத்துகளும் அதிகம் இருக்கின்றன. எனவே வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நெல்லிக்காய்களை சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள் வலிமையடைகிறது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் நெல்லிக்காய்களை உண்பது அவர்களின் எலும்புகளின் ஆரோக்கியமான நிலைக்கு நல்லதாகும்.

நாம் தினமும் சாப்பிடும் அனைத்து வகையான உணவுகளிலும் ஏதாவது ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த பொருளின் கலப்படம் சிறிது உள்ளது என்பது மறுக்க இயலாத உண்மை. அத்தகைய நச்சுக்கள் நிறைந்த உணவை நாம் சாப்பிட்டாலும் அவற்றை நீக்கி உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும் ஒரு உறுப்பாக கல்லீரல் செயல்படுகிறது. கல்லீரல் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். அந்த கல்லீரலில் ஹெப்பாடிட்டீஸ் வைரஸ் கிருமிகளால் பாதிப்பு ஏற்படும் போது மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகின்றது. கல்லீரலில் ஏற்படும் கிருமி தொற்றால் ஏற்படும் ஒரு நோய் மஞ்சள் காமாலை. இந்த நோய் பாதிப்பு கொண்டவர்கள் தொடர்ந்து நெல்லிக்கனிகளை உண்பதால் ஈரலில் இருக்கும் கிருமிகள் அழிந்து மஞ்சள் காமாலை குணமாகும்.

மனித உடலில் மற்ற உறுப்புகளை போலவே பித்தப்பையும் ஒரு முக்கிய உறுப்பாக இருக்கிறது. இந்த பித்தப்பையில் சுரக்கப்படும் பித்த நீர் நாம் சாப்பிடும் உணவு நன்கு செரிமானம் ஆவதற்கும், அந்த செரிமானம் செய்யப்பட்ட உணவுகளிலிருந்து பெறப்படும் ஊட்டச்சத்து உடலுக்கு தரும் அரும்பணியையும் பித்த நீர் செய்கிறது. அத்தகைய பித்த பை ஆரோக்கியமாக இருப்பது அவசியமாகும். நெல்லிக்கனிகளில் இருக்கும் ரசாயனம் பித்தப்பைகளில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. மேலும் பித்த பை சிறப்பாக செயல்படவும் உதவுகிறது.

நாம் அன்றாட இயங்குவதற்கு சக்தி நாம் உண்ணும் உணவில் இருந்தே கிடைக்கிறது. அப்படி உண்ணும் உணவில் இருந்து முழுமையான சக்தியை பெற நமது வயிறு மற்றும் செரிமான உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஒரு சிலர் கண்ட, கண்ட உணவு வகைகளை உண்பதால் வயிற்றில் புண்கள் அஜீரண கோளாறுகள் போன்றவை ஏற்படுகின்றன. நெல்லிக்காய்களை தினமும் சாப்பிட்டு வருவதால் வயிற்று புண்கள் மற்றும் வயிறு சம்பந்தமான பல பிரச்சனைகளும் நீங்கும்.

இன்று உலகில் பலரையும் அச்சுறுத்தும் நோயாக புற்று நோய் உருவெடுத்திருக்கிறது. இந்தப் புற்று நோய்க்கான சிகிச்சைக்கு ரசாயனம் கலந்த நவீன மருந்துகளை சாப்பிட்டாலும் புற்றுநோயின் பாதிப்பு குறைகிறதே தவிர முழுமையாக யாருக்கும் குணம் கிடைப்பதில்லை. ஆனால் புற்றுநோயை வராமல் தடுக்கவும், புற்று நோய் பாதிப்புகளை நீக்கும் மருத்துவ சக்தி இயற்கையான உணவுகள் கொண்டிருப்பதாக பலர் கருதுகின்றனர் அப்படியான உணவுகளில் ஒன்றாக நெல்லிக்கனி கருதப்படுகிறது. நெல்லிக்கனியில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் பல ரசாயனங்களும், வேதிப்பொருட்களும் உள்ளன. இந்த நெல்லிக்காய்களை தொடர்ந்து சாப்பிடும் நபர்களுக்கு புற்று நோய் வராமல் தடுக்கிறது.

கர்பிணி பெண்களுக்கு மிகவும் ஏற்றது .முக்கியமாக மகப்பேறுகாலங்களில் உதவும்

இத்தனை பயன்களை தருவதினால் தினமும் ஒன்று என சாப்பிட்டுவர நம்மை எந்த நோய் தொற்றும் அண்டாமல் ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ளலாம்

இதை ஜூஸ் செய்து வைத்துக்கொண்டால் நம் அன்றாட வாழ்க்கை ஓட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள வசதியாக இருக்கும். நெல்லி ஜூஸ் தினமும் பயன்படுத்தினால் சிறிது காலத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.

நெல்லிக்காய் தைலம் நாட்டு மருந்துக் கடைகளில் பரவலாக விற்பனை செய்யப்படுகின்றது. இதனைத் தலையில் தேய்த்துத் தலைமுழுகிவர கண்கள் பிரகாசமாக இருக்கும்; பொடுகு கட்டுப்படுவதுடன், முடி உதிர்தலும் தடுக்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

if pregnant ladies eat nellikkai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal