அறிவோம் நாமும்: மன அழுத்ததைக் குறைக்க புகைப்பிடித்தல் மட்டுமல்ல இதுவும் தீர்வுதான்.!! - Seithipunal
Seithipunal


மனிதர்கள் அனைவருக்கும் பொதுவாக பல சூழல்களில் ஏற்படுவது கோபம். இந்த கோபத்தை அடக்குவதற்காக பெரும்பாலானோர் (புகை அல்லது மது பழக்கம் உள்ளவர்கள்) புகை பிடிப்பது அல்லது மதுவை அருந்துவதன் மூலமாக அவர்களின் மன அழுத்தத்தை குறைகின்றனர். 

பலர் தங்களின் கோபங்களை தனக்கு தெரிந்தவர்கள் அல்லது இல்லத்தார்களிடம் வெளிப்படுத்தி சாந்தம் அடைகின்றனர். மேலும் பலர் கோபத்தை வெளிப்படுத்த இயலாமல் மனதிற்குலேயே வைத்து புழுங்கி பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். அவ்வாறு இருப்பவர்களுக்கு இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளதை கடைபிடிப்பதன் மூலம் நன்மைகள் நடக்கும். 

சாக்லேட்: 

பொதுவாக சாக்லேட்டில் பலவகையான சாக்லேட் வகைகள் உள்ளன. அந்த சாக்லேட்டில் உள்ள டார்க் சாக்லேட் வகையை சார்ந்த சாக்லெட்டை சுவைக்கும் போது நம்மை அறியாமலேயே ஒருவிதமான மகிழ்ச்சி ஏற்படும்., அந்த டார்க் சாக்லேட்டில் உள்ள ’அனாடமைட்’ என்ற பொருளின் காரணாமாக நம்மக்கு ஏற்படும் துக்கம்., வலி மற்றும் மனஅழுத்தம் போன்றவை குறைகிறது. 

க்ரீன் டி:

க்ரீன் தேநீரில் பொதுவாகவே ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகமாக உள்ளது., இதன் மூலமாக மூளையின் கோபங்கள் குறைக்கப்பட்டு., மூளையை அமைதிப்படுத்துகிறது. 

யோகர்ட்: 

யோகர்ட்., பால் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருளே யோகர்ட் என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலமாக மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தை எளிதில் குறைக்க இயலும். 

அவகோடா பழம்: 

அவகோடா பழமானது., மனிதனின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பொருட்டு பெரும் பங்கு வகிக்கும் பழம் அவகோடா பழம். இந்த பழத்தின் மூலம் மனஅழுத்தத்தின் போது ஏற்படும் மனஅழுத்தத்தை சீராக்குவதற்கு பெரிதும் உதவுகிறது., மேலும் இந்த பழத்தில் மனிதனுக்கு தேவையான 20 முக்கிய சத்துக்கள் அடங்கியுள்ளது.

ப்ளூ பெரி பழங்கள்:

ப்ளூ பெரி பழங்கள் மூலமாக மனஅழுத்தமானது பெரிதளவு குறைக்க முடிகிறது., இதற்கு காரணம் இந்த பழத்தில் உள்ள ஆந்தோசயனின் பொருளாகும். இந்த பழத்தை உண்பதன் காரணமாக நமது நினைவாற்றல் மற்றும் உடல் ஒருங்கிணைப்பு ஆகியவை மேம்படும்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HOW TO RELAX WITHOUT SMOKING


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->